இதுக்கு எதுக்கு குழந்தை? கர்நாடகாவில் இப்படி ஒரு ஜோடி? இந்த பெண்ணுக்கு மனசாட்சியே கிடையாதா? கடவுளே
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த சம்பவத்தை கேட்டு, ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள்.
கர்நாடகா மாநிலம், உத்தர கன்னடா மாவட்டத்தில் ஹலமாதி என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சாவித்திரி.. இவருக்கு 32 வயதாகிறது.. இவரது கணவர் ரவிக்குமார்.. 36 வயதாகிறது.. ரவிக்குமார் கொத்தனாராக வேலை பார்க்கிறார்.. ஆனாலும், இவர்கள் குடும்பம் வறுமையில் இருந்ததால், குடும்ப செலவுக்கே போதாமல் இருந்தது.. அதனால், சாவித்திரியும் வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.

தகராறு: இவர்களுக்கு 6 வயதில் வினோத் என்ற ஆண் குழந்தை இருக்கிறான்.. இந்த குழந்தை ஒரு மாற்றுதிறனாளி.. அதாவது வினோத்திற்கு செவித்திறன், பேச்சு குறைபாடு இருந்ததாக தெரிகிறது.. இதனால், தம்பதிக்கு நடுவே தினமும் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது..
அப்படித்தான் நேற்று முன்தினம் இரவும், தம்பதிக்கு நடுவே, வழக்கம்போல் சண்டை வந்துள்ளது.. இருவருமே சரமாரியாக தகராறில் இறங்கிவிட்டனர்.. ஒருகட்டத்தில் ஆவேசமடைந்த சாவித்திரி குழந்தையை தூக்கி கொண்டு கோபத்துடன் வெளியே வந்தார்..
கால்வாய்: அப்போது இரவு 9 மணியிருக்கும்.. இவர்கள் வீட்டுக்கு பக்கத்திலேயே கால்வாய் ஓடுகிறது.. இது காளி ஆற்றில் இணையக்கூடிய கால்வாய் ஆகும்.. அதுமட்டுமல்ல, இந்த கால்வாயில் நிறைய முதலைகள் இருக்கிறதாம்.... ஆனால், ஆத்திரம் கண்ணை மறைத்த நிலையில், கணவன் மீதிருந்த கோபத்தில் குழந்தையை கால்வாயில் வீசிவிட்டார் சாவித்திரி..
இதைப்பார்த்து அங்கிருந்த மக்கள் பதறிப்போய் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தந்தார்கள்.. போலீசும், தீயணைப்பு வீரர்களும் உடனடியாக விரைந்து வந்து, கால்வாயில் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், குழந்தையின் உடலை யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் தீயணைப்பு வீரர்கள் விடாமல் இரவு பகலாக தேடினார்கள்..
சடலம்: இறுதியில் குழந்தையின் சடலத்தை மீட்டார்கள்.. அனைவரும் பயந்தபடியே, குழந்தையை பதம் பார்த்துவிட்டது கால்வாயிலிருந்த ஒரு முதலை.. குழந்தையின் உடலை முதலையின் தாடையில் இருந்து மீட்டிருக்கிறார்கள்.. அந்த குழந்தையின வலது கையை பிய்த்து சாப்பிட்டிருக்கிறது அந்த முதலை.. உடம்பெல்லாம் பலத்த காயங்கள் கிடந்தன.. குழந்தையை ஆங்காங்கே கடித்து வைத்திருக்கிறது அந்த முதலை..
இறுதியில், மனசாட்சியே இல்லாமல் குழந்தையை தூக்கி கால்வாயில் வீசி கொன்ற அம்மா - அப்பா இருவரையுமே போலீஸார் கைது செய்து, ஜெயிலில் வைத்திருக்கிறார்கள்.
சித்திரவதை: கணவரின் சித்திரவதை காரணமாகவே, குழந்தையை கால்வாயில் வீசி கொன்றதாக சாவித்திரி வாக்குமூலம் தந்திருக்கிறார்.. ஆனாலும் இந்த பெண்ணை மன்னிக்கவே முடியவில்லை.. செய்த காரியத்தையும் ஜீரணிக்கவே முடியவில்லை..
இவர்கள் இருவரின் சண்டையில், அந்த பச்சபுள்ள என்ன பாவம் செய்ததோ? முதலையின் வாயிக்குள் சிக்கியபோது, வலியால் கதறிகூட அழமுடியாத, அந்த வாய் பேச முடியாத ஜீவனை நினைத்தாலே, நமக்கு ஈரக்குலையே நடுங்குகிறது...!!












Click it and Unblock the Notifications