ஸ்கூட்டியில் பறந்த டி.கே.சிவகுமார்! துணை முதல்வர் இப்படி பண்ணலாமா! என்ன ஆச்சு? கர்நாடகாவில் சலசலப்பு
பெங்களூர்: பெங்களூர் ஹெப்பால் மேம்பாலம் ஆக.15ம் தேதிக்குள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பாலத்தில் ஸ்கூட்டி ஓட்டி துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பயன்படுத்திய ஸ்கூட்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அவர் ஓட்டிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர், பெங்களூரு ஹெப்பால் மேம்பாலத் திறப்பு விழாவின் போது கவனிக்கப்பட்டது. இந்த ஸ்கூட்டர் டி.கே. சிவகுமாருக்கு சொந்தமானது இல்லை என்றாலும், அவர் அணிந்திருந்த ஹெல்மெட் சட்டவிரோதமானது என தெரியவந்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களுக்காக ₹18,000க்கு மேல் அபராத பாக்கி வைத்திருந்த ஸ்கூட்டரை சிவகுமார் பயன்படுத்தியுள்ளார். இந்த ஸ்கூட்டர் 30க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டிருந்தது. அபராதங்கள் செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர் அணிந்திருந்த ஹெல்மெட் விவகாரம் மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
தரமற்ற ஹெல்மெட்கள் சட்டப்படி அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்திய தர நிர்ணய ஆணையம் (ISI) அங்கீகரித்த ஹெல்மெட்களை விற்கவும், பயன்படுத்தவும் வேண்டும் என சட்டம் கூறுகிறது. தரமற்ற ஹெல்மெட்களைப் பயன்படுத்துபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் ஐ.எஸ்.ஐ. தரச் சான்றிதழ் பெறுவதில் உள்ள தாமதங்கள் காரணமாக, வெளிநாட்டு நிறுவனங்களான ஆராய், ஷோய், பெல், ஹெச்.ஜே.சி போன்ற உலகத் தர ஹெல்மெட்கள் இந்தியாவில் கிடைப்பதில்லை.
பொதுமக்கள் சட்டத்தை மதிக்கும்படி எதிர்பார்க்கப்படும் நிலையில், ஒரு மாநிலத்தின் துணை முதல்வரே சட்டத்தை மீறுவது எப்படி நியாயம் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இத்தகைய முக்கிய தலைவர்கள் விதிமீறல்களில் ஈடுபடும்போது, அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications