கர்நாடகாவில் பரபரப்பு: சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில் துணை முதல்வர் டிகே சிவகுமார் போட்டியா?
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி ராஜினாமா செய்த சென்னப்பட்டணா சட்டசபை தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் தாம் போட்டியிடலாம் என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் டிகே சிவகுமார் சென்னப்பட்டணாவில் போட்டியிடுவது கர்நாடகா அரசியல் கவனம் பெற்றுள்ளது.
லோக்சபா தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி வெற்றி மத்திய அமைச்சராகிவிட்டார். இதனால் தமது சென்னப்பட்டணா தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி. லோக்சபா தேர்தலில் பெங்களூர் ரூரல் தொகுதியில் துணை முதல்வர் டிகே சிவகுமாரின் சகோதரர் டிகே சுரேஷ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். டிகே சுரேஷின் தோல்வி, டிகே சிவகுமாருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

இந்த நிலையில் சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இத்தொகுதியின் ஜேடிஎஸ் கோட்டையாக இருக்கிறது. இதனை காங்கிரஸ் வசமாக்கும் வகையில் டிகே சிவகுமாரே வேட்பாளராக களம் இறங்குவார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக டிகே சிவகுமார் கூறுகையில், சென்னப்பட்டணாவை நான் மிகவும் நேசிக்கிறேன். இத்தொகுதிதான் எனக்கு அரசியல் வாழ்க்கையையே கொடுத்தது. லோக்சபா தேர்தலிலும் சென்னப்பட்டணா தொகுதியில் காங்கிரஸ் கட்சி 80,000 வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது.
சென்னப்பட்டணாவில் உள்ள கோவில்களில் வழிபட்டுவிட்டு அத்தொகுதி மக்களுடன் ஆலோசனை நடத்துவேன். மக்கள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் நானே போட்டியிடுவதா? என்பது குறித்து முடிவு செய்யப்படும். என் சகோதரர் டிகே சுரேஷ் போட்டியிடுவாரா? என்பது முடிவெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் மேலிடம் மற்றும் சென்னப்பட்டணா மக்கள் ஆலோசனைகள், முடிவுகளின் படியே யார் வேட்பாளர் என முடிவெடுக்கப்படும் என்றார்.
சென்னப்பட்டணாவில் டிகே சிவகுமார் போட்டியிட்டால் தற்போதைய கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். டிகே சிவகுமார், சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில் களம் கண்டால், அவரது சகோதரர் டிகே சுரேஷ், கனகபுரா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடக் கூடும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications