புத்த மதத்துக்கு மாறிய பட்டியலினத்தவருக்கு எஸ்.சி சான்றிதழ் வழங்க வேண்டும்.. கர்நாடக அரசு உத்தரவு!
பெங்களூர்: கர்நாடகாவில் புத்த மதத்துக்கு மாறிய பட்டியல் பிரிவினருக்கு SC சான்றிதழ் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டியலின வகுப்பில் உள்ள 101 பிரிவுகளில், எந்த பிரிவைச் சேர்ந்தவர் புத்த மதத்துக்கு மாறினாலும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் சமூக நலத்துறை நேற்று பிறப்பித்த உத்தரவில், கர்நாடகாவில் பட்டியல் வகுப்பில் 101 பிரிவினர் உள்ளனர். இதில் எந்த பிரிவைs சேர்ந்தவர், புத்த மதத்துக்கு மாறியிருந்தாலும், அவர்களுக்கு எஸ்.சி சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

கர்நாடக பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சட்ட விதிகள் இதனை ஏற்கெனவே உறுதி செய்திருக்கிறது.
கடந்த 1990-ல் மத்திய அரசு வெளியிட்ட அரசாணையிலும், கர்நாடக அரசு 2013-ல் வெளியிட்ட சுற்றறிக்கையிலும் இது அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ல் மத்திய அரசு, அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களிடமும் புத்த மதத்தினராக மாறிய பட்டியலினத்தவர் எஸ்.சி சாதிச் சான்றிதழ்களைப் பெறுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
எனவே கல்வி, வேலைவாய்ப்பு தேவைக்காக புத்த மதத்துக்கு மாறிய பட்டியலினத்தவருக்கு எஸ்.சி சாதிச் சான்றிதழ் வழங்குவது கட்டாயமாகிறது. இந்த உத்தரவை அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள் மற்றும் நிறுவனங்கள் உடனடியாக பின்பற்றி செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள்/ பெற்றோர்கள் விரும்பினால், அரசுப் பள்ளிகள்/ தனியார் பள்ளிகள்/ பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பிற கல்வி நிறுவனங்களின் ஆவணங்களில் மதம் என்பதில் புத்த மதத்தை குறிப்பிட அனுமதிக்கிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications