கர்நாடகாவில் ஓட்டளிக்க கோவாவில் இருந்து 100 பஸ்களில் வந்தவர்கள் யார்?பின்னணியில் பாஜக? சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இன்று காலை 7 மணிக்கு சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் அண்டை மாநிலங்களான கோவா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவில் ஓட்டளிக்க பல ஆயிரம் பேர் 100 பஸ்களில் அழைத்து வரப்பட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. மேலும் இதன் பின்னணியில் பாஜகவினர் இருப்பதாக காங்கிரஸ் கட்சி சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம். கடந்த 2018 ல் தேர்தல் நடந்த நிலையில் 5 ஆண்டுக்கு பிறகு இன்று சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

Karnataka Election: 100 buses, Thousands of people from Goa, Maharashtra are arriving to karanataka to cast their votes

இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் மொத்தம் 5 கோடியே 21 லட்சத்து 33 ஆயிரத்து 054 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 43 லட்சத்து 48 ஆயிரத்து 028 பேர் புதிய வாக்காளர்கள் ஆவார்கள். மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 37,777 இடங்களில் 58 ஆயிரத்து 545 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்ப்டுள்ளன. காலை முதலே மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று ஓட்டு செலுத்தி வருகின்றனர். மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு மையங்களை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் தற்போது புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. அதாவது தேர்தலையொட்டி அண்டை மாநிலமான கோவா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து 100 பஸ்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கர்நாடகவுக்கு நேற்று ஒரே நாளில் கூட்டம் கூட்டமாக அழைத்து வரப்பட்டனர். குறிப்பாக கோவாவில் இருந்து வந்தவர்கள் அம்மாநில அரசு பஸ்களில் வந்தது விவாதத்தை கிளப்பியது. இதனால் காங்கிரஸ் கட்சி சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அதோடு வடகர்நாடகாவில் கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பாஜகவின் ஓட்டு வங்கியாக உள்ளனர். இந்நிலையில் தான் 100 பஸ்களில் அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டு இருப்பது பற்றி காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்தது. கர்நாடகா தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும் என்பதற்கான வடகர்நாடகா மக்களை பஸ்களில் பாஜக அழைத்து வந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் கோவாவில் பாஜக ஆட்சியும், மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியும் நடக்கிறது. இந்நிலையில் தான் அவர்கள் பஸ்களை தயார் செய்து கர்நாடகா தொழிலாளர்களை அழைத்து வந்து ஓட்டு செலுத்த வைப்பதாக குற்றம்சாட்டி உள்ளன. ஆனால் பாஜக தரப்பு இதனை மறுத்துள்ளது.

வடகர்நாடகாவை சேர்ந்த மக்கள் கோவாவில் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் நிலையில் அவர்கள் ஓட்டளிக்க பஸ்களில் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அண்டை மாநிலங்களான கர்நாடகாவுடன் இருக்கும் கோவா, மகாராஷ்டிரா எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து வரும் வாகனங்களை சோதனை செய்தே மாநிலத்துக்குள் அனுமதிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+