‛‛பணம் இருக்கா பையை காட்டுங்க’’.. டிகே சிவக்குமாரின் ஹெலிகாப்டரை சுற்றிய பறக்கும் படை! பரபர வாதம்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தனது குடும்பத்துடன் இன்று ஹெலிகாப்டரில் தர்மஸ்தாலாவில் உள்ள கோவிலுக்கு சென்றார். இந்த வேளையில் ஹெலிபேட்டில் ஹெலிகாப்டர் இறங்கியவுடன் அவர்களிடம் பணம் ஏதேனும் உள்ளதா? என பைகளை தேர்தல் பறக்கும்படையினர் சோதனையிட்டனர். மேலும் பைலட்டுக்கும், பறக்கும்படையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் கர்நாடகாவில் அரசியல் கட்சி தலைவர்கள் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டது போல் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் மேலிட தலைவர்களும் மாநிலத்துக்கு அடிக்கடி விசிட் செய்து பேரணி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு பொதுக்கூட்டங்களிலும் பாஜக தலைவர்கள் காங்கிரஸையும், காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவினரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் மட்டுமே உள்ளதால் தலைவர்கள் ஒரே நாளில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். ஒரே நாளில் 5க்கும் அதிகமான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்பதால் பல தலைவர்கள் ஹெலிகாப்டர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் கடலோர கர்நாடகாவின் தட்சின கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள கோவிலுக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார். இந்த ஹெலிகாப்டர் தர்மஸ்தலாவில் உள்ள ஹெலிபேட்டில் தரையிறங்கியது. டிகே சிவக்குமாரின் மனைவி உஷா, மகள், மருமகன் மற்றும் மகன் உள்ளிட்டவர்கள் ஹெலிகாப்டரில் இருந்தனர்.
இதையடுத்து டிகே சிவக்குமாரை வரவேற்க கட்சியினர் மாலையுடன் ஹெலிகாப்டர் அருகே சென்றனர். இந்த வேளையில் திடீரென்று தேர்தல் பறக்கும் படையினர் என்ட்ரி கொடுத்தனர். தொண்டர்கள், நிர்வாகிகளை நெருங்க விடாமல் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் உடனடியாக ஹெலிகாப்டரை சுற்றிவளைத்தனர். ஹெலிகாப்டரில் டிகே சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வைத்திருந்த பை, சூட்கேஸ்களை அதிரடியாக சோதனை செய்தனர்.

மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ள நிலையில் அவர்கள் பணம் ஏதேனும் எடுத்து வந்தனரா? இல்லையா? என்பதை பறக்கும்படையினர் சோதனையிட்டனர். இந்த வேளையில் பைலட், தேர்தல் பறக்கும்படையினருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுபற்றி பைலட் ராம்தாஸ் கூறுகையில், ‛‛இது தனியார் ஹெலிகாப்டர். தற்போது அரசியல் பயணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை. தனிப்பட்ட விஷயத்துக்காக பயன்படுத்தப்படுகிறது இதில் சோதனை நடத்தக்கூடாது. '' என்றார்.
இருப்பினும் கூட தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஹெலிகாப்டர் மற்றும் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு செல்ல நிறுத்தப்பட்டு இருந்த கார் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். இதுபற்றி டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛இந்த சோதனையில் எந்த தவறும் இல்லை. சோதனை செய்வதர்கள் அவர்களின் பணியை செய்துள்ளனர்'' என கூறிவிட்டு சென்றார்.
முன்னதாக கடந்த 17 ம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது அவர் கட்டுக்கட்டாக பணம் கொண்டு சென்றதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வினய் குமார் சொரகே குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அண்ணாமலை முற்றிலுமாக மறுத்திருந்தார். மேலும் தேர்தல் ஆணையமும் அண்ணாமலை ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது. அவர் பணம் எடுத்து செல்லவில்லை என கூறியது. இந்நிலையில் தான் டிகே சிவக்குமாரின் ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications