ஷாக்.. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பில்லை! துள்ளிகுதிக்கும் ஜேடிஎஸ்! காரணம் இதுதான்
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஸ்பைக் மீடியா நெட்வொர்க் சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ், பாஜகவுக்கு பெரிய ஷாக்கை கொடுத்துள்ள நிலையில் ஜேடிஎஸ் கட்சிக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை வழங்கி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. மாலை 5 மணிநேர நிலவரப்படி மொத்தம் 65.69 சதவீத ஓட்டு பதிவானது.

இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி ஸ்பைக் மீடியா நெட்வொர்க் சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஸ்பைக் மீடியா நெட்வொர்க் சார்பில் மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 3,895 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த கருத்து கணிப்பின்படி 41 தொகுதிகள் உள்ள ஹைதராபாத்-கர்நாடகா மாவட்டங்களில் பாஜக 17 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளிலும் ஜேடிஎஸ் கட்சி 2 இடங்களிலும், மற்றவர்கள் 2 தொகுதியிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 தொகுதிகளை உள்ளடக்கிய மும்பை-கர்நாடகா மாவட்டங்களில் கா்பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி பாஜக 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. ஜேடிஎஸ், உள்பட மற்றவர்களுக்கு இங்கு வெற்றி வாய்ப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் கடலோர கர்நாடகா மாவட்டங்களில் மொத்தம் 19 தொகுதிகள் உள்ள நிலைில் அங்கு பாஜக தான் முன்னிலை பெறும். பாஜக 15 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்ள்ளது. ஜேடிஎஸ் உள்பட மற்றவர்களுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என கூறப்பட்டுள்ளது. மேலும் ஜேடிஎஸ்ஸின் கோட்டையான பழைய மைசூர் மாவட்டங்களில் 57 தொகுதிகளில் அக்கட்சிக்கு 21 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும். அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸ் கட்சிக்கு 19 தொகுதிகளிலும், பாஜகவுக்கு 15 இடங்களிலும், மற்றவர்கள் 2 தொகுதியிலும் வெற்றி பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதுதவிர 25 தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய கர்நாடகா மாவட்டங்களில் பாஜக 14 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், ஜேடிஎஸ் 2 இடங்களிலும் மற்றவர் ஒரு இடத்திலும் வெல்வார்கள் என கூறப்பட்டுள்ளது, பெங்களூர் மற்றும் பெங்களூர் புறநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய 32 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 13 தொகுதிளையும், பாஜக 14 இடங்களையும், ஜேடிஎஸ் கட்சி 4 இடங்களிலும் மற்றவர்கள் ஒரு இடத்திலும் வெல்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பின் முடிவில் 38.93 சதவீத ஓட்டுகள் பெற்றுபாஜக 104 இடங்களில் வெற்றி பெறும் எனவும், 38.19 சதவீத ஓட்டுகளுடன் காங்கிரஸ் கட்சி 85 தொகுதிகளிலும், 14.39 சதவீத ஓட்டுகளுடன் ஜேடிஎஸ் கட்சி 29 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் யாருக்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலை உள்ளது. இதனால் ஜேடிஎஸ் கட்சி உதவியோடு தான் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும். இதன்மூலம் கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சி கிங்மேக்கராக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications