கட்சி பார்க்காதீங்க.. ஜாதி பார்த்து வாக்களியுங்கள்.. கர்நாடக தேர்தலில்.. பிராமண சங்கம் பரபர முடிவு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் சட்டசபை தேர்தலில் ஜாதி பார்த்து மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து கர்நாடக பிராமண மகாசபை சார்பாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வேட்புமனு தாக்கல் தொடக்கம் தொடங்கி உள்ளது.

கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அங்கு மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

Karnataka Election: All Karnataka Brahmin Mahasabha requests Brahmins to vote only Brahmin candidates

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான் கர்நாடகாவில் சட்டசபை தேர்தலில் ஜாதி பார்த்து மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து கர்நாடக பிராமண மகாசபை சார்பாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதாவது கர்நாடகாவில் போட்டியிடும் கட்சியை பார்க்க வேண்டாம். காங்கிரஸ் பாஜக எந்த கட்சியாக இருந்தாலும் சரி.

எந்த கட்சி பிராமண வேட்பாளர்களை நிறுத்துகிறதோ..அந்த கட்சியின் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். இரண்டு கட்சிகளும் பிராமணர்களை நிறுத்தினால் அதில் பிடித்தவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கர்நாடக பிராமண மகாசபை சார்பாக முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

எல்லா தேர்தலிலும் கர்நாடக பிராமண மகாசபை சார்பாக இதே முடிவு எடுக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த முறையும் அதே முடிவை பிராமண மகா சபை எடுத்துள்ளது.

கர்நாடகாவில் பொது தொகுதிகள்- 173; எஸ்சி 36; எஸ்டி 15 உள்ள என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. கர்நாடகாவில் மொத்தம் 58,282 வாக்கு சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்.

கர்நாடகாவில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக பிராமண சமூகம் இல்லை, என்றாலும் மிக நெருக்கமான மோதல் நடக்கும் தொகுதிகளில் அவர்கள் முடிவுகளை தீர்மானிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Karnataka Election: All Karnataka Brahmin Mahasabha requests Brahmins to vote only Brahmin candidates

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரி வருவதற்கு ஒருதரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு சமூக மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், சில நாட்களிலேயே இந்த விவகாரம் கர்நாடகாவில் உள்ள மற்ற கல்லூரிகளிலும் காட்டுத் தீ போல பரவியதுடன், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதையடுத்து, கல்வி நிலையங்களில் ஹிஜாபை அணிந்து வர கர்நாடகா அரசு தடைவிதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றமும் இந்த தடை செல்லும் என்று அறிவித்தது.

இது போக உடுப்பியில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது.இங்கு எல்லா வருடமும் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடை போட்டு வந்தனர். இந்த வருடம் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கர்நாடகாவில் ஹலால் பொருட்களை வாங்க கூடாது என்றும் இந்துக்கள் இடையே பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இது போக இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இப்படி இந்துக்கள் இஸ்லாமியர்கள் இடையிலான பிரிவினை, மத மோதல் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில்தான் அங்கு வழிபாட்டு தலங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலில் சிக்மங்களூர் நகராட்சியில் இந்த கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

Karnataka Election: All Karnataka Brahmin Mahasabha requests Brahmins to vote only Brahmin candidates

தற்போது பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவில் மற்ற பகுதிகளிலும் மசூதிகள், சர்ச்கள், கோவில்களில் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. காற்று மாசு ஏற்படுத்துவதாக கூறி இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மசூதிகளில்தான் அதிகமாக ஸ்பீக்கர் இருக்கும் என்பதால் அங்கே இந்த தடை தீவிரமாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. அங்கே மதம் பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக மதம்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+