‛ஆடியோ’ அரசியல்.. தமிழகத்தை போல் கர்நாடகாவிலும்.. குறுக்கே புகுந்த அண்ணாமலை! காங்கிரசுக்கு பதிலடி
பெங்களூர்: தமிழ்நாட்டில் ஆடியோவை வைத்து அரசியல் செய்வது போல் இன்னும் 3 நாளில் தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவிலும் ஆடியோ ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இது பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில் தான் பாஜகவுக்கு ஆதரவாக இந்த பிரச்சனையின் உள்ளே தமிழ்நாடு மாநில தலைவரும், கர்நாடகா மாநில தேர்தல் இணை பொறுப்பாளரும் அண்ணாமலை உள்ளே நுழைந்து அதிரடி காட்டியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கு மே 10ல் தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். கர்நாடகா தனது சொந்த மாநிலம் என்பதால் மல்லிகார்ஜூன கார்கே தொடர்ந்து அங்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே கலபுரகி மாவட்டம் சித்தராபுரா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். இந்த தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜகவில் மணிகண்ட ராதோடு களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் பாஜக வேட்பாளர் மணிகண்ட ராதோடு மீது காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தது. மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்வதாக அவர் பேசியதாக காங்கிரஸ் கட்சி நேற்று ஆடியோ ஒன்றை வெளியிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி பெங்களூரில் கர்நாடக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், ‛காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் அவரது மனைவி, மகன்களை கொலை செய்து விடுவதாக கூறுவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அப்படி பேசுவது சாதாரண நபர் இல்லை. அவர் பாஜக வேட்பாளர். பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர் பொம்மையின் செல்லப்பிள்ளையான சித்தாப்புராவில் போட்டியிடும் நபர். அவர் மீது 40க்கும் அதிக வழக்கு உள்ளது'' என்றார்.
இந்த ஆடியோ ரிலீசுக்கு தமிழக பாஜக தலைவரும், கர்நாடகா மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அண்ணாமலை கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா பிரசாரத்துக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சி அச்சமடைந்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் கலக்கமடைந்துள்ளனர். பாஜகவை வீழ்த்த குறுக்கு வழியை தேடுகின்றனர். தினமும் புதிது புதிதாக கதை சொல்கிறார்கள். அதில் ஒன்று தான் இந்த ஆடியோ.
இதை கேட்டால் எல்கேஜி குழந்தை கூட சிரிக்கும். இந்த ஆடியோ சித்தரிக்கப்பட்டது. கட் காப்பி பேஸ்ட் ஆடியோ தான் இது. பாஜக வேட்பாளரை ரவுடி என்கிறார்கள். அவருக்கு எந்த அரசியல் பின்புலமும், குடும்பத்தில் யாரும் கட்சி பொறுப்பில் இல்லை. தன் மீதான குற்றச்சாட்டுகளையும் பொய் என நிரூபித்து வருகிறார்.அவர் மீது பொய் குற்றச்சாட்டு வைக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களில் 36 பேர் மீது சீரியஸ் கிரிமினல் வழக்கு உள்ளது. மேலும் ஒருவர் வீட்டுக்கு என்ஐஏ ரெய்டு நடத்தப்பட்டுள்து. இருக்கிறது. அவர் பயங்கரவாதிகளுக்கு பணம் கொடுத்து ஆதரவு செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
கர்நாடகாவில் அனைத்து கிரிமினல்களையும் தங்கள் பக்கம் வைத்துக்கொண்டு காங்கிரஸ் இப்படி ஒரு ஆடியோ வெளியிட்டது வேடிக்கையாக இருக்கிறது. பாஜவின் அனல் பறக்கும் பிரசாரத்தால் சுர்ஜேவாலாவும் காங்கிரஸ் தலைவர்களும் அதிகமாக சூடாகிவிட்டார்கள். சூட்டை தணிக்க அவர்கள் மோர் குடிக்க வேண்டும். குறிப்பாக கர்நாடக அரசு நிறுவனத்தின் நந்தினி மோர் ரொம்ப நல்லது. கர்நாடகாவில் பாஜவின் வெற்றி உறுதி. ஆட்சி எங்களுக்கு தான்'' என அண்ணாமலை பதிலடி கொடுத்தார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications