Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரியஅடி.. உட்கட்சி சர்வேயில் பாஜகவுக்கு ஷாக்.. கர்நாடகா தேர்தலில் அரியணை ஏறும் காங்கிரஸ்?பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்னும் 3 மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் பாஜக சார்பில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வே முடிவு என்பது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் ‛கை' ஓங்கி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜகவினர் ஷாக் அடைந்துள்ளனர். இந்த சர்வே காங்கிரஸ் கட்சிக்கு பலமாக பார்க்கப்படும் நிலையில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வியூகங்கள் இறுதிக்கட்டத்தில் கைக்கொடுக்கலாம் என்பதால் கதர் கட்சியும் கலக்கத்தில் தான் உள்ளது. பாஜக மேற்கொண்ட சர்வேயில் என்ன உள்ளது? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக காய் நகர்த்தி வருகிறது. அதேவேளையில் இழந்த ஆட்சியை மீட்டெடுக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சி வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது.

இதுதவிர ஜனதாதளம் (எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் முறையே கர்நாடக அரசியல் களத்தில் சாதிக்கும் முனைப்பில் உள்ளன. இந்த கட்சிகள் தற்போது வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதி வாரியாக பூத் கமிட்டியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி

கர்நாடகாவில் பாஜக ஆட்சி

தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக பசவராஜ் பொம்மை உள்ளார். மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியைமக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். கடந்த 2018 ல் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) என எந்த கட்சிகளுக்கும் தனித்து ஆட்சியைமக்க தேவையான 113 எம்எல்ஏக்கள் கிடைக்கவில்லை. இதனால் தொங்கு சட்டசபை உருவானது. ஆனாலும் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. மொத்தம் 104 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. ஆளும்கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பின்தங்கியது. ஜனதாதளம் (எஸ்) கட்சி 37 இடங்களில் வென்று 3வது இடம் பிடித்தது. காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி முதல் ஒன்றரை ஆண்டுகள் நடந்த நிலையில் 15க்கும் அதிக எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவினர். கூட்டணி ஆட்சி முடிந்த நிலையில் தான் பாஜக ஆட்சியை பிடித்தது. தற்போது பாஜகவுக்கு 117 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 72 பேரும் ஜனதாதளம் கட்சிக்கு 30 பேரும் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

பாஜக சர்வே

பாஜக சர்வே

இந்நிலையில் தான் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் நோக்கத்தில் பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அந்த கட்சி சார்பில் வரும் சட்டசபை தேர்தல் தொடர்பாக சர்வேக்கள் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு வார அடிப்படையில் சர்வேக்கள் மேற்கொள்ளப்பட்டது. கட்சி மற்றும் வெளிக்குழுவினர் ஒருமாதம் வரை மேற்கொண்ட சர்வேக்களில் பாஜகவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதாம். இந்த சர்வேக்கள் பாஜகவுக்கு ஷாக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வரும் தேர்தலில் பாஜக தனித்து ஆட்சியை பிடிக்க முடியாத சூழல் நிலவும் என்பதோடு, கடந்த தேர்தலை விட மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே பாஜக பெறும் என அந்த சர்வேக்களில் கூறப்பட்டுள்ளது.

70 இடங்கள் மட்டுமே

70 இடங்கள் மட்டுமே

இந்த சர்வேயானது ஒருமாதம்மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் 70 இடங்களுக்குள் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என சர்வே சொல்கிறது. இந்த சர்வே முடிவின்படி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது எனவும், முந்தைய ஆண்டை காட்டிலும் ஜனதாதளம்(எஸ்) கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக சர்வே தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸ் 115க்கும் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சி 40க்கும் அதிகமான இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதனால் மாநில பாஜக தலைவர்கள் மற்றும் மத்தியில் உள்ள பாஜக தலைவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வேட்பாளர் தேர்வில் கவனம்

வேட்பாளர் தேர்வில் கவனம்

2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தால் அது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய தென்மாநிலங்களில் கட்சிக்கு பெரிய பிளஸ் பாயிண்டாக அமையும் என பாஜக நினைத்த நிலையில் இந்த சர்வே ஷாக் கொடுத்துள்ளது. இதனால் தற்போது பாஜக சார்பில் வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. வெற்றி வாய்ப்பு உள்ளவர்களை மட்டும் தேர்தலில் களமிறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதோடு, தோல்வி முகம் மற்றும் இழுபறியில் உள்ளவர்களுக்கு பதில் புதிய இளம்வயதினருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோடி, அமித்ஷா மீது நம்பிக்கை

மோடி, அமித்ஷா மீது நம்பிக்கை

இந்த சர்வே முடிவுகள் இப்படி இருந்தாலும் கூட பாஜகவினர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். அமித்ஷாவின் பிரசார வியூகம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டம், பிரசாரம் என்பது தேர்தல் சமயத்தில் பாஜகவுக்கு கைக்கொடுக்கலாம். மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் மக்கள் மனதை வெல்வது முக்கியமாகும். இதில் பாஜக தலைவர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதை பல தேர்தல்களில் நிரூபித்துள்ளனர். இதனால் பாஜகவினரும் வெற்றியை பெறும் முனைப்பில் களப்பணியாற்ற தொடங்கி உள்ளனர். இதனால் கர்நாடகா தேர்தல் வெற்றி என்பது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எளிதாக இருக்காது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

சறுக்கலுக்கு காரணம் என்ன?

சறுக்கலுக்கு காரணம் என்ன?

கர்நாடகாவில் தற்போது 40 சதவீத கமிஷன் நடைமுறையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. அதாவது அரசு பணிகளை முடித்து கொடுக்கும் ஒப்பந்ததாரரின் பணத்தை விடுவிக்க பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 40 சதவீத கமிஷன் பெறுவதாக காங்கிரஸ் கட்சி கூறி வரும் நிலையில் சில ஒப்பந்ததாரர்கள் அதனை மெய்பிக்கும் வகையில் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துள்ளனர். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதுதவிர மதம்சார்ந்த பிரச்சனை போராட்டங்கள் சமீபத்தில் கர்நாடகாவில் அடிக்கடி நடந்தன. இதுவும் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமையலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+