Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி விஷப்பாம்பா? அப்போ சோனியா யாரு தெரியுமா? கர்நாடகா பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு.. மோதல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விஷப்பாம்பு போன்றவர் என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்கும் சோனியா காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கர்நாடகா பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் பேசியிருப்பது இருகட்சியினருக்கும் இடையே மோதலை உருவாக்கி உள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே பாஜக, காங்கிரஸ் உள்பட பல கட்சி தலைவர்களின் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இன்னும் தேர்தலுக்கு 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Karnataka Election: BJP MLA Basanagouda Patil Yatnal calling Sonia Gandhi is visha kanya, after Kharge Modi Remark

குறிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்தி மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது. இதுதவிர ஜேடிஎஸ், ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல கட்சி தலைவர்களும் கர்நாடகாவில் பல இடங்களில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக கர்நாடகா என்பது காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் சொந்தமாநிலமாகும். மேலும் அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான பிறகு முதல் முறையாக கர்நாடகா தேர்தலை சந்திக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு அதிகமாக உள்ளது. இந்நிலையில் தான் அவர் ஹைதராபாத்-கர்நாடகா பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களில் தொடர்ந்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

தற்போது கர்நாடக தேர்தல் களத்தில் பிரசாரம் அனல் பறக்கிறது. பாஜ, காங்கிரஸ் தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்கும் பஞ்சம் இல்லை. இந்நிலையில் தான் கதக்கில் நடந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே நேற்று பேசினார். அப்போது, ‛‛பிரதமர் மோடி விஷப் பாம்பு போன்றவர். அந்த பாம்பு நக்கினால் செத்துவிடுவீர்கள்'' என பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மல்லிகார்ஜூன கார்கே விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‛‛நான் பிரதமர் மோடியை விஷப்பாம்பு என கூறவில்லை. பாஜகவை தான் அப்படி சொன்னேன். எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். ஏனென்றால் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேச வேண்டிய நிலை எனக்கு இல்லை'' என்றார்.

இருப்பினும் இந்த பிரச்சனை என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை. பாஜகவினர் தொடர்ந்து விரம்ரசனம் செய்து வருகின்றனர். மேலும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பாஜக தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தான் தற்போது கர்நாடகாவில் சர்ச்சைக்கு பெயர் பெற்ற பாஜக எம்எல்ஏவான பசனகவுடா பாட்டீல் சோனியா காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

Karnataka Election: BJP MLA Basanagouda Patil Yatnal calling Sonia Gandhi is visha kanya, after Kharge Modi Remark

அதாவது பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை பார்த்து விஷ்கன்யா என தெரிவித்துள்ளார். விஷ்கன்யா என்பது விஷமுள்ள பெண் என பொருள்படும். இதன்மூலம் சோனியா காந்தி தான் விஷமுள்ள பெண் என அவர் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை மல்லிகார்ஜூன கார்கே விஷப்பாம்பு என்றதால் பசனகவுடா பாட்டீல் சோனியா காந்தியை விஷப்பெண் என விமர்சித்துள்ளார்.

இதனால் பசனகவுடா பாட்டீலுக்கும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர் மன்னிப்பு கோர வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் பசனகவுடா பாட்டீல் இன்னும் மன்னிப்பு, வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் தற்போது தேர்தலுக்கு மத்தியில் இந்த விவகாரம் கர்நாடகாவில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் மோதலை ஏற்படுத்தி உள்ளது.

சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ள பசனகவுடா பாட்டீல் முன்னாள் மத்திய அமைச்சராவார். இவர் தற்போது விஜயாப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். மீண்டும் அந்த தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கி உள்ளார். இவர் சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல. இவர் இதற்கு முன்பும் பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் பசனகவுடா பாட்டீலை பாஜகவில் இருந்து நீக்க காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக இருகட்சியினர் இடையே தற்போது கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+