கர்நாடகா: தொங்கு சட்டசபையில் கூட்டணி யாருடன்? பாஜக-காங்கிரசுக்கு குமாரசாமி நிபந்தனை!இதோ லிஸ்ட்-ஆஹா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் யாருடன் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என்பது பற்றியும், ஜேடிஎஸ் கட்சி சார்பில் விதிக்கப்படும் நிபந்தனைகள் பற்றிய பரபரப்பான அதேநேரத்தில் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்து முடிந்தது. இங்கு 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக அன்றயை தினம் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 72.67 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மதியத்துக்கு மேல் கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது எந்த கட்சி என்பது தெரிந்துவிடும்.

கர்நாடகாவில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக போராடி வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறது. மாறாக தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைந்து கிங்காக மாறி முதல்வர் பதவியை பெற ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ் நிலவரம்: இந்நிலையில் நேற்று முன்தினம் ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இதில் இந்தியா டுடே கருத்து கணிப்பு காங்கிரஸ் கட்சி 122 முதல் 140 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக பல கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி 100க்கும் அதிக இடங்களில் வெற்றிபெறும். ஆனால் 113 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளது.
பாஜக நிலவரம்: அதேபோல் பாஜக கட்சி அதிகபட்சமாக 80 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என பல கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. இருப்பினும் சில கருத்து கணிப்புகள் பாஜக தான் 90 முதல் 105 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளன. இதன்மூலம் மாநிலத்தில் தொங்கு சட்டசபை உருவாகலாம் என்றே பல கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

ஜேடிஎஸ் நிலவரம்: ஒருவேளை மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு 100 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று 113 இடங்களை கைப்பற்ற முடியாமல் போனால் நிச்சயம் இருகட்சிகளும் ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவை தான் நாடும். இந்த தேர்தலில் ஜேடிஎஸ் சுமார் 20 முதல் 30 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளதால் அந்த கட்சி தான் கிங்மேக்கராக மாறும் என கூறப்படுகிறது.
காங்கிரஸ்-பாஜக வியூகம்: அதாவது அந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்கிறதோ அவர்கள் தான் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் காங்கிரஸ், பாஜகவினர் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடிக்கவும் தயாராகி வருகின்றனர். இதற்கிடையே தான் கர்நாடகாவில் தொங்கு சட்டசபை அமைந்தால் ஜேடிஎஸ் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது பற்றி குமாரசாமி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

குமாரசாமி விளக்கம்: தேர்தல் முடிந்த நாளில் அவர் தனது நண்பர்களுடன் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் கூறியதாவது: கருத்து கணிப்புகளில் ஜேடிஎஸ் கட்சிக்கு மிகவும் குறைந்த சீட்களில் தான் வெற்றி பெறும் என கூறியுள்ளன. ஆனால் இந்த தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி 50 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் கூட்டணி ஆட்சி அமைக்க நான் ரெடி. ஆனால் எனது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் தான் கூட்டணி அமைப்பேன். அது பாஜக, காங்கிரஸ் கட்சி என எதுவாக இருந்தாலும் நான் கூறும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
நிபந்தனைகள் என்னென்ன: அதாவது இதற்கு முன்பு பாஜக கூட்டணியில் 2006லும், காங்கிரஸ் கூட்டணியில் 2018 ம் ஆண்டிலும் குமாரசாமி முதல்வராக இருந்துள்ளார். இந்த 2 முறையும் ஆட்சி கவிழ்ந்தது. இந்நிலையில் தான் இந்த முறை சில நிபந்தனைகள் பற்றி கூட்டணிக்கு முன்பே கையெழுத்து வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் முதல்வர் பதவி குமாரசாமிக்கு, முக்கிய துறைகளான நீர்ப்பாசனம், மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறைகளை ஜேடிஎஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்க வேண்டும்.
ஹாசன், மண்டியா விவகாரம்: மேலும் கூட்டணி ஆட்சியின்போது ஹாசன், மண்டியா மாவட்டங்களில் ஜேடிஎஸ் கட்சிக்கு எதிராக செயல்பட கூடாது. இருமாவட்டங்களிலும் ஏதேனும் செய்தால் அதுபற்றி ஆலோசித்த பிறகே மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை குமாரசாமி நிபந்தனைகளாக விதிக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஹாசன் என்பது குமாரசாமியின் சொந்த மாவட்டமாகும். ஒருவேளை இருகட்சிகளும் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டாலும் கூட கட்சியின் நலன் சார்ந்தே பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றில் ஒன்றுடன் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications