Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிச்சனிலேயே முடிவா? அஸ்திரத்தை அசைக்கும் சிடி ரவி.. எடியூரப்பா மகனுக்கு எதிர்ப்பு.. பாஜகவில் மோதல்

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடகாக பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா அறிவித்த நிலையில் ‛‛நான் போட்டியிட்ட சிகாரிப்புரா தொகுதியில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார்’’ என கூறினார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக முகமாக பார்க்கப்படும் எடியூரப்பா அரசியலில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் அவரது தொகுதியில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்கு பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தலில் சீட் வழங்குவது தொடர்பான முடிவை யாருடைய வீட்டு சமையலறையிலும் எடுக்க முடியாது என கூறியுள்ளார். இதற்கு எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பதிலடி கொடுத்த நிலையில் பாஜகவில் புகைச்சல் கிளம்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் பாஜகவின் முகமாக இருப்பவர் எடியூரப்பா. தென்இந்தியாவில் பாஜக ஆட்சியை பிடிக்க சிரமத்தை சந்தித்து வந்த நிலையில் முதல் முதலாக கர்நாடகாவில் பாஜக ஆட்சியை பிடிக்க எடியூரப்பா தான் வழிவகுத்தார்.

2018 தேர்தலில் கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி நடந்தது. இந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து எடியூரப்பா பாஜக முதல்வராக பொறுப்பேற்றார்.

விரைவில் தேர்தல்

விரைவில் தேர்தல்

எடியூரப்பா 2 ஆண்டு வரை முதல்வராக இருந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும், அவரின் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவருமான பசவராஜ் பொம்மை முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார். விரைவில் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதம் தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பான தேதியை விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

ஓய்வு அறிவிப்பு

ஓய்வு அறிவிப்பு

இந்நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிவித்தார். தற்போது அவர் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் வரும் தேர்தலில் போட்டியிட போவது இல்லை என அறிவித்தார். இது பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் எடியூரப்பா தான் அங்கு பாஜகவின் முகமாக உள்ளார்.

மகன் போட்டியிடுவதாக அறிவிப்பு

மகன் போட்டியிடுவதாக அறிவிப்பு

இதற்கிடையே தான் கட்சி தலைமை வலியுறுத்தலின்போது தேர்தலில் பிரசாரம் செய்ய உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛தேர்தல் அரசியலில் விலகினாலும் கூட மீண்டும் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வரும் வகையில் பணியாற்றுவேன். என் மகன் விஜயேந்திரா சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிடுவார். அவரை என்னை விட அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்'' என தெரிவித்தார்.

துவங்கிய மோதல்

துவங்கிய மோதல்

எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா தற்போது சிவமொக்கா எம்பியாக உள்ள நிலையில் அவரது இன்னொரு மகன் விஜயேந்திரா பாஜக மாநில துணை தலைவராக உள்ளார். இவர் தான் தனக்கு பதில் வரும் தேர்தலில் தேர்தலில் சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிடுவதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் தற்போது பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரான சிடி ரவிக்கும், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

சீட் வழங்க சிடி ரவி எதிர்ப்பு

சீட் வழங்க சிடி ரவி எதிர்ப்பு

சிடி ரவி சிக்கமகளூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அவர் நேற்று முன்தினம் பேசியது எடியூரப்பா தரப்பை அதிருப்தியடைய செய்துள்ளது. அதாவது விஜயாப்புராவில் சிடி ரவி பேசும்போது, ‛‛தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதை எப்போதும் குடும்பம் முடிவு செய்யாது. பாஜகவை பொறுத்தமட்டில் ஒரு வீட்டு சமையலறையில் இருந்து முடிவுகள் எதுவும் எடுக்கப்படுவது இல்லை. தலைவர்களின் பிள்ளைகள் என்பதாலேயே சீட் கிடைக்காது. சீட் கொடுப்பது குறித்து அவர்களின் வீட்டில் முடிவு செய்ய முடியாது. நாடாளுமன்ற கு தான் முடிவு செய்வோம். விஜயேந்திராவுக்கு சீட் கொடுப்பதும் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். இதுபற்றி அவரது வீட்டு சமையலறையில் முடிவு எடுக்க முடியாது. இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி எப்படி பிரதமரானாரோ அதுபோன்ற வாய்ப்பு இங்கு நடக்காது'' என்றார்.

 விஜயேந்திரா பதிலடி

விஜயேந்திரா பதிலடி

எடியூரப்பா அரசியலில் ஓய்வு பெற்ற நிலையில் தனது மகன் விஜயேந்திராவை சிகாரிப்புரா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவித்த நிலையில் சிடி ரவி இப்படி தெரிவித்துள்ளார். இது பாஜகவில் புயலை கிளப்பியது. குறிப்பாக எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் சிடி ரவியை விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தான் சிடி ரவிக்கு எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா பதிலடி கொடுத்துள்ளார்.

 விஜயேந்திரா சொன்னது என்ன?

விஜயேந்திரா சொன்னது என்ன?

கொப்பல் மாவட்டம் குஷ்டகியில் நடந்த கூட்டத்தில் விஜயேந்திரா கூறுகையில், ‛‛அரசியலில் உங்களுக்கு எதிரிகள் அதிகமாக இருக்கும்போது நீங்கள் வளர்கிறீர்கள். கட்சியின் துணை தலைவராக நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். நமது பேரணியில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்கின்றனர். சிடி ரவி மூத்த தலைவராக உள்ளார். பாஜகவுக்கு எடியூரப்பாவின் பங்களிப்பு என்ன? என்பது சிடி ரவிக்கு தெரியும். தேர்தலில் சீட் வழங்குவது குறித்து முடிவு எடியூரப்பாவின் சமையலறையிலோ அல்லது யாருடைய சமையலறையிலோ முடிவு எடுக்கப்படவில்லை. பாஜகவில் போட்டியிட சீட் எங்கு இறுதி செய்யப்படுகிறது என்பது அனைவருக்குமே தெரியும். எனது தேர்தல் அரசியல் பற்றி நான் கவலைப்படவில்லை. கட்சியின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்" என்றார்.

 பாஜகவில் கிளம்பிய புகைச்சல்

பாஜகவில் கிளம்பிய புகைச்சல்

கர்நாடகாவில் பாஜக சார்பில் சமீபத்தில் தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டது. இதற்கு எடியூரப்பா தலைமையேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. மாறாக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் தேர்தல் பிரசார குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் எடியூரப்பா தரப்பு அப்செட் ஆன நிலையில் தற்போது அவரது மகன் விஜயேந்திராவுக்கு தேர்தலில் போட்டியிடவும் சிடி ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடகா பாஜகவில் புகைச்சல் கிளம்பி உள்ளது.

கண்ணீருக்கே சக்தி உண்டாம்

கண்ணீருக்கே சக்தி உண்டாம்

இதற்கிடையே பாஜகவில் எடியூரப்பா ஓரம்கட்டப்படுகிறாரா? என்பது குறித்து கர்நாடகா பாஜக தலைவர் டிகே சிவக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி டிகே சிவக்குமார், ‛‛ தற்போது எடியூரப்பாவை கட்சியில் இருந்து ஓரம்கட்ட சதி நடக்கிறது. இது அவர்களின் உள்கட்சி விவகாரம். இதில் நான் ஒன்று செய்ய முடியாது. எடியூரப்பாவின் கணக்கீர் என்பது கர்நாடகா அரசியலின் போக்கையே மாற்றும்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+