காங்கிரஸ் தலைவர்கள் முகமெல்லாம் பூரிப்பு.. 140 தொகுதிகளை அள்ளுமாம்.. இந்தியா டுடே எக்சிட் போல்!
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று இந்தியா டுடே வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. பாஜகவிற்கு கடும் பின்னடைவு ஏற்படும் என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
கர்நாடகாவில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் அம்மாநில சட்டப்பேரவைக்கு இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்படி, கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 10 (இன்று) ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி அறிவித்தது.

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி நிறைவு பெற்றது. தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கர்நாடக தேர்தல் களத்தில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் உள்ளனர். ஆளும் பாஜக சார்பில் 224 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் 223 வேட்பாளர்களும் ஜேடிஎஸ் கட்சி சார்பில் 209 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் பாஜக தற்போது 116 இடங்களுடன் தனிபெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், அடுத்து யார் ஆட்சி என்ற வாக்காளர்களின் தீர்ப்பு வரும் 13 ஆம் தேதி தெரியும்.

வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 122 தொகுதிகள் முதல் 140 தொகுதிகளிலும் பாஜக 62-80 தொகுதிகளிலும் ஜேடிஎஸ் 20-25 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியை கொடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து பிரசாரத்தில் பேசி வந்தார். தற்போது இந்தியா டுடே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படி காங்கிரஸ் கட்சி அந்த மேஜிக் எண்ணை தாண்டும் என்றே தெரிகிறது.
அதேவேளையில், பாஜக கடும் பின்னடவை சந்திக்கும் என்று இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஜேடிஎஸ் கட்சிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்றே கணிப்புகள் சொல்கின்றன.
கர்நாடகாவில் கடந்த முறை 80 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை அதிகபட்சமாக 140 தொகுதிகளை பெறும் என இந்தியா டுடே கருத்து கணிப்பு கூறியிருப்பது சற்று வியப்பையே கொடுத்துள்ளது. ஏனெனில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தொங்கு சட்ட சபையை நோக்கித்தான் செல்லும் என்று கூறியிருந்த நிலையில், இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பு 122-140 என்ற கூறியிருப்பது அங்குள்ள காங்கிரஸ் கட்சியினருக்கு தற்போதே புது தெம்பை கொடுக்கத் தொடங்கிவிட்டதாம்.
மறுமுனையில் பாஜகவுக்கு இது பெரிய ஷாக் என்பதில் சந்தேகமே இல்லை. அதேபோல், கடந்த தேர்தலில் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் அதிகபட்சமாக 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதனால் ஜேடிஎஸ் கட்சிக்கும் இது பெரும் ஷாக்காகவே இருக்கும்.
தொங்கு சட்ட சபை அமைந்தால் குமாரசாமி யாருக்கு ஆதரவு கொடுக்கிறாரோ அவர்தான் ஆட்சி அதிகாரத்தில் அமர முடியும் என்ற நிலை இருக்கும். ஆனால், இந்தியா டுடேவின் இந்த கருத்துக்கணிப்பு ஜேடிஎஸ் கட்சிக்கும் அதிர்ச்சி வைத்தியமாகவே உள்ளது. எது எப்படி இருந்தாலும் வாக்காளர்களின் உண்மையான தீர்ப்பு வரும் 13 ஆம் தேதிதான் உறுதியாக தெரியும்.
-
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications