பிரதமர் மோடி சூப்பராம்! சிஎம் பொம்மை தான் மோசமாம்! சர்வேயில் ட்விஸ்ட்.. கர்நாடகாவை வெல்லுமா பாஜக?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியான நிலையில் பிரதமர் மோடி நன்றாக செயல்படுகிறார் என கூறிய மக்கள், முதல்வர் பசவராஜ் பொம்மையின் செயல்பாடு சரியில்லை என கூறியுள்ளனர். இதனால் கர்நாடகா பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மக்களின் ஆதரவு அங்கு யாருக்கு உள்ளது என்பது குறித்து கருத்து கணிப்பு முடிவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு தேதி குறிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் நேற்று டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தார்.
அதன்படி மே மாதம் 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடக்கிறது. மே 13ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. மேலும் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 21ல் நடைபெறும் நிலையில் மனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 24 கடைசி நாளாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நான்கு முனை போட்டி
கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியாக காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் இடையே நான்கு முனை போட்டி நிலவ உள்ளன. இதுதவிர பிற கட்சிகளும் தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் முனைப்பில் களம்காண உள்ளன. தேர்தல் தேதிக்கு முன்பே ஜேடிஎஸ், காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. இந்த கட்சிகள் 2வது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது. மாறாக பாஜகவும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் கர்நாடகா அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

24,759 பேர் பங்கேற்ற கருத்து கணிப்பு
இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி நேற்று ஏபிபி -சிவோட்டர் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. இந்த கருத்து கணிப்பில் மொத்தம் 24,759 பேர் பங்கேற்றனர். இந்த கருத்து கணிப்பில் கர்நாடகா தேர்தல் குறித்தும், முக்கிய தலைவர்களின் செயல்பாடுகள் பற்றிய கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.

பசவராஜ் பொம்மை
அதன்படி கருத்து கணிப்பில் தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையின் செயல்பாடு எப்படி உள்ளது? என்ற கேள்விக்கு 46.9 சதவீதம் பேர் மோசம் என கருத்து தெரிவித்துள்ளனர். 26.3 சதவீதம் பேர் பரவாயில்லை எனவும், 26.8 சதவீதம் பேர் நன்றாக செயல்படுகிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி
அதேபோல் இந்த கருத்து கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு எப்படி உள்ளது? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 47.4 சதவீதம் பேர் நன்றாக செயல்படுகிறார் என ஆதரவு தெரிவித்துள்ளனர். மாறாக 33.8 சதவீதம் பேர் மோசம் எனவும், 18.8 சதவீதம் பேர் பரவாயில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பொம்மையை முந்திய பிரதமர் மோடி
கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் செயல்பாடு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் பசவராஜ் பொம்மையின் செயல்பாட்டை விட பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டுக்குத் தான் கர்நாடகா மக்கள் ஆதரவு தெரிவித்துள்னளர். இதனால் கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற அல்லது அதிக இடங்களில் வெற்றி பெற வைக்க பிரதமர் நரேந்திர மோடி தன்னை முன்னிறுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் பாணியை எடுக்கும் மோடி?
ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசம், குஜராத், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல்கள் நடந்தன. அப்போது பாஜக வேட்பாளர்களை விட தனக்காகவும், தனது முகத்தை பார்த்தும் ஓட்டளிக்க வேண்டும் என கூறினார். அதேபாணியை பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவிலும் முன்னெடுத்தால் அது பாஜகவுக்கு கைக்கொடுக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரசுக்கு தனி மெஜாரிட்டி
இருப்பினும் கூட இந்த கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் நேற்று வெளியான ஏபிபி-சிவோட்டர் கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி 115 முதல் 127 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பாஜக 68 முதல் 80 தொகுதிகளிலும், ஜேடிஎஸ் கட்சி 23 முதல் 35 தொகுதிகளிலும் வாகை சூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications