தொங்கு சட்டசபை பீதி! பிற கட்சி எம்எல்ஏக்களை இழுக்க திட்டம்?காங்கிரஸ், பாஜக மேஜர் மூவ்-பரபர கர்நாடகா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவு நாளை வெளியாகும் நிலையில் தொங்கு சட்டசபை உருவாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ரிசல்ட்டுக்கு முன்பே காங்கிரஸ், பாஜக கட்சியினர் முக்கிய நகர்வுகளை கையில் எடுத்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. 73 சதவீத ஓட்டுகள் பதிவான நிலையில் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. நாளை காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலைக்குள் ரிசல்ட் முழுவதும் வெளியாகி விடும்.
இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் சி வோட்டர் மற்றும் ஆக்சிஸ், இந்தியா டுடே ஆகிய கருத்து கணிப்புகள் மட்டும் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளது.

மாறாக பெரும்பலானவை மாநிலத்தில் தொங்கு சட்டசபை தான் உருவாகும் என கூறியுள்ளன. இதனால் தனித்து ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டும் காங்கிரஸ், பாஜக கட்சியினர் கவலையடைந்துள்ளன. இருப்பினும் கருத்து கணிப்பு முடிவுகளை கவனத்தில் கொள்ள வேண்டாம். தனி மெஜாரிட்டியுடன் நாங்கள் தான் ஆட்சியமைப்போம் என பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் கூட இருகட்சி தலைவர்களுக்கும் ஒரு பீதி உள்ளது. அதாவது மாநிலத்தில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன செய்வது? என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக பல கருத்து கணிப்பில் கர்நாடகாவில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறலாம். காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காது என கூறியுள்ளன. அதேவேளையில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜகவும் சுமார் 80 முதல் 100 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ள என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேலும் பாஜகவினரும் கருத்து கணிப்புகளை புறம்தள்ளிவிட்டு நிச்சயம் பாஜக ஆட்சி அமையும் என தெரிவித்து வருகின்றன.

மாநிலத்தில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் 100 இடங்களை பாஜக கைப்பற்றினால் நிச்சயம் ஆட்சியை பிடிக்க அக்கட்சி முழுமுயற்சி எடுக்கும். அதாவது ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அல்லது காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் எம்எல்ஏக்களின் ஆதரவுகளை பெற முயலும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தான் தற்போது மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக கட்சிகள் வியூகங்களை வகுத்து வருகின்றன.
இதில் முக்கிய விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது காங்கிரஸ், பாஜக கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பிற கட்சி வேட்பாளர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறபப்டுகிறது. பாஜக அமைச்சர் ஆர் அசோக், மாநிலத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் அதற்கு தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடிப்போம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதற்கு பிளான் பி இருப்பதாகவும் கூறினார். இதன் பின்னணியில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜக குறிவைத்து இழுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றியும் அக்கட்சி தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் ஜேடிஎஸ் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைக்க பேசி வருகிறது. அதோடு மட்டுமின்றி வெற்றி வாய்ப்புள்ள ஜேடிஎஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களுடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு ஜேடிஎஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து தற்போது வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள நபர்களுடன் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தொடங்கி உள்ள தகவல்கள் கசிந்துள்ளன.

இருப்பினும் கூட அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பிற கட்சியில் வெற்றி பெறுபவர்களை இழுப்பதை காட்டிலும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவே காங்கிரஸ், பாஜக கட்சிகள் விரும்புவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் நாளைய தேர்தல் முடிவு மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். கர்நாடகாவை பொறுத்தமட்டில் தொங்கு சட்டசபை அமைவதும், எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதும் புதிதல்ல. இதற்கு முன்பு 2006, 2018 தேர்தல்களில் தொங்குசட்டசபை அமைந்து ஆட்சிகள் கவிழ்ந்துள்ள வரலாறு கர்நாடகாவில் உள்ளது. இதனால் நாளைய தேர்தல் முடிவை கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications