கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு உடல்நல குறைவு... மருத்துவமனையில் அனுமதி
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் அவர் இப்படி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி வந்து கொண்டிருக்கிறது. தொங்கு சட்டசபை அமைந்தால் நிச்சயம் ஜேடிஎஸ் கட்சி கிங் மேக்கராகவே மாறும். இதனால் ஜேடிஎஸ் மீதான கவனம் அதிகரிக்கவே செய்துள்ளது.
குமாரசாமி: இந்தச் சூழலில் கர்நாடக முன்னாள் முதல்வரும் ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் & உடல் சோர்வாகக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குமாரசாமி உடல்நிலை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் விரைவாகக் குணமடைந்து வருவதாகவும் பெங்களூரு மணிபால் மருத்துவமனை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. தலைவர் சோர்வு மற்றும் பலவீன அறிகுறிகளுடன் அவர் நேற்று மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை நிர்வாகம்: இது குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், "எச்டி குமாரசாமி 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி மாலை, மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சோர்வு மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தேவைப்படும் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் விரைவாகக் குணமடைந்து வருகிறார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் அங்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இந்தச் சூழலில் ஜேடிஎஸ் தலைவர் குமாசராமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது அக்கட்சி தொண்டர்களுக்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல்: கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளது. அங்கே பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க ஒரு கட்சி குறைந்தபட்சம் 113 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால், ஜேடிஎஸ் ஓல்ட் மைசூர் பகுதியில் வலிமையாக உள்ள நிலையில், அவர்களுக்குக் கணிசமான அளவில் இடங்கள் நிச்சயம் கிடைக்கும். அப்படியிருக்கும் போது தொங்கு சட்டசபை அமைந்தால், நிச்சயம் ஜேடிஎஸ் கிங் மேக்கராக இருக்கும்.
முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் பாஜக என இரு கட்சிகளுக்குமே பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கிடைக்கிவ்லைல. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் அவர்களுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது ஜேடிஎஸ் கட்சியுடன் இணைந்தே காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. அப்போது ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி தான் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்தத் தேர்தலில் அதேபோல மீண்டும் அதேபோல எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் மீண்டும் ஜேடிஎஸ் கிங் மேக்கராக இருக்கும்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications