எனது அம்மாவின் உயிரை காப்பாற்றுங்கள்.. டிக்டாக்கில் கண்ணீர் விட்ட பெண்.. முதல்வரை எட்டிய அழுகுரல்
பெங்களூர்: தனது தாய்க்கு மருந்து வாங்க முடியாமல் தவித்த கர்நாடக பெண் ஒருவர் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்ட நிலையில் அவருக்கு மாநில அரசு உதவி செய்துள்ளது.
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கால் தனது தாயின் சிறுநீரக கோளாறுக்காக மருந்து வாங்க முடியாத இளம்பெண் ஒருவர் அழுது கொண்டே மருந்து கேட்ட வீடியோ அனைவரையும் கண் கலங்க வைத்துவிட்டது.
கர்நாடகா மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் பவித்ரா ஆரபவி (18). இவரது தாய் பல மாதங்களாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு அண்மையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

தட்டுப்பாடு
இதையடுத்து அவர் தினமும் 4 விதமான மாத்திரைகளைக் கட்டாயம் உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர் உயிர் வாழ்வது கடினம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இதைடுத்து அவர் தினமும் மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார். ஆனால் ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு, அவருக்குத் தேவையான மாத்திரைகளை வாங்குவதில் தட்டுப்பாடு நிலவியுள்ளது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
இதனால் மருந்து வாங்க முடியாமல் தவித்த பவித்ரா, வேறு வழியின்றி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டார். அதில் தனக்கு உதவும்படி முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். பவித்ரா கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோவில், எனது தாய்க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட அதிகாரிகள்
இந்த லாக்டவுன் காலத்தில் அவருக்கு தேவையான மருந்துகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனது தாய்க்கு மருந்து கிடைக்க முதல்வர் எடியூரப்பா உதவ வேண்டும். தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில் வைரலானது. இந்த தகவல் முதல்வர் எடியூரப்பாவின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து அடுத்த நாளே மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்று அளித்தனர்.

மாவட்ட நிர்வாகம்
அந்த வீடியோவில் மாத்திரைகளின் பெயர்களையும் வெளியிட்டார். Mycophenolate mofetil, tacrocord, tacrolimus, valganiciclovir hydrochloride ஆகிய மருந்துகளைத்தான் பவித்ரா கேட்டிருந்தார். மாதத்திற்கு இந்த மருந்துகள் வாங்க ரூ 20 ஆயிரம் செலவாகிறதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த மருந்துகள் பெங்களூரில் கிடைக்காததால் 2 நாட்கள் பவித்ராவின் தாயால் மருந்து உட்கொள்ள முடியவில்லை. இதனால் அவர் வாந்தி எடுக்கத் தொடங்கினார். இதனால் யாராவது உதவி செய்வர் என்பதால் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டதாக பவித்ரா தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வர் எடியூரப்பாவிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications