சாலையில் அரசு பஸ்சை நிறுத்தி நமாஸ் செய்த டிரைவர்.. வீடியோ வெளியானதால் பாயும் நடவடிக்கை?
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு பஸ்சை சாலையில் நிறுத்தி பயணிகள் அமரும் இருக்கையில் டிரைவர் நமாஸ் செய்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் பல்வேறு அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றனர். கேஎஸ்ஆர்டிசி பஸ் கர்நாடகாவுக்குள்ளும், கர்நாடகாவுக்கும் வெளியேவும் இயங்கி வருகிறது. அதேபோல் பிஎம்டிசி என்பது பெங்களூர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வருகிறது.

அதேபோல் என்டபிள்யூகேஆர்டிசி (NWKRTC) பஸ்சும் இயங்கி வருகிறது. இது வடகர்நாடகா மாவட்டங்களில் அதிகமாக இயங்கி வருகிறது. இந்த என்டபிள்யூகேஆர்டிசி பஸ் ஹாவேரி மாவட்டம் ஹனகல்லில் இருந்து விஷால்கார்க் என்ற இடம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பஸ் முழுவதும் பயணிகள் இருந்தனர். இந்த பஸ் உப்பள்ளி மற்றும் ஹாவேரி இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டராக ஏஆர் முல்லா என்பவர் பணியில் இருந்தார். இந்த சமயத்தில் திடீரென்று ஏஆர் முல்லா பஸ்சை பாதி வழியில் நிறுத்தினார். பஸ்சை சாலையின் ஒருபகுதியில் அவர் நிறுத்தினார். அதன்பிறகு அவர் டிரைவர் இருக்கையின் பின்னால் உள்ள இருக்கைக்கு வந்து நமாஸ் செய்தார்.
இதனை பஸ்சில் இருந்த பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. இதற்கிடையே பஸ்சில் டிரைவர் நமாஸ் செய்யும் வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருவதோடு, விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பணி நேரத்தில் பஸ்சை நடுவழியில் நிறுத்தி டிரைவர் நமாஸ் செய்ததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். அதேவேளையில் இன்னொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். பஸ்சில் சில நிமிடங்களில் அவர் நமாஸ் செய்து முடித்து இருப்பார். ஒவ்வொருவரின் மத நம்பிக்கைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக ஹாவேரி டிவிஷனல் போக்குவரத்து கண்ட்ரோலர் விஜயகுமார் கூறுகையில், ‛‛பணி நேரத்தில் பஸ்சுக்குள் டிரைவர் கம் கண்டக்டர் நமாஸ் செய்தது தொடர்பான விவகாரம் எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. பணி நேரத்தில் இத்தகைய செயலுக்கு அனுமதியில்லை.
இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டள்ளது. விசாரணை அறிக்கை வந்தவுடன் அதனடிப்படையில் நடவடிக்கை என்பது எடுக்கப்படும்'' என்று கூறினார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications