ஜாக்பாட்.. கர்நாடகாவில் அனைத்து போலீசாருக்கும் வெள்ளி பதக்கம்..சித்தராமையா முடிவு.. சுவாரசிய பின்னணி
பெங்களூர்: கர்நாடகாவில் பணியாற்றும் அனைத்து போலீசாருக்கும் வெள்ளிப்பதக்கம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்றார். இவர் ஏற்கனவே 2013-2018 வரை முதல்வராக இருந்த நிலையில் 2வது முறையாக முதல்வரானார்.

இதையடுத்து தேர்தல் வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் கர்நாடகாவில் பணியாற்றி வரும் அனைத்து போலீசாருக்கும் வெள்ளிப்பதக்கம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூரில் இன்று மூத்த காவல் அதிகாரிகளின் ஆண்டு மாநாட்டில் முதல்வர் சித்தராமையா பங்கேற்று பேசினார். அப்போது தான் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அப்போது அவர், ‛‛நமது மாநிலத்துக்கு கர்நாடகா என பெயர் சூட்டியதன் பொன் விழா ஆண்டில் நாம் இருக்கிறேன். இதற்கு முன்பு மைசூர் மாகாணம் என்று இருந்தது. போலீசார் மைசூர் போலீசார் என அழைக்கப்பட்டனர். அதன்பிறகு கர்நாடகா என மாநிலம் பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து கர்நாடகா போலீசார் என்று அழைக்கப்படுகின்றனர்.
நம் மாநிலத்துக்கு கர்நாடகா என பெயரிடப்பட்டதன் 50 வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் வகையில் அனைத்து போலீசாருக்கும் வெள்ளி பதக்கம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இந்த அறிவிப்பால் கர்நாடகா போலீசார் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications