மைசூரில் பிரதமர் மோடி தங்கியதற்காக வாடகை பாக்கி 80 லட்சம் ரூபாய்.. கர்நாடகா அரசு எடுத்த அதிரடி முடிவு
பெங்களூர்: மைசூரில் கடந்த ஆண்டு பிரதமா் நரேந்திர மோடி தங்கியதற்கான நட்சத்திர விடுதி கட்டண பாக்கி ரூ.80 லட்சத்தை கா்நாடக அரசே செலுத்தும் என்று அந்த மாநிலத்தின் வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலையில் வனவிலங்கு சரணாலயம் இருக்கிறது. இந்த இடம் அடர்ந்த வனப்பகுதியில் அதுவும் கர்நாடகா மாநில எல்லையை ஒட்டி இருக்கிறது. மேலும் ஊட்டி மைசூரு பிரதான சாலையில் உள்ள இந்த காப்பகத்தை ஒட்டி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டது.

பந்திப்பூர் புலிகள் காப்பகம் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 ஆயிரத்து 278 சதுர கிலோ மீட்டரில் முதலில் 9 புலிகள் விடப்பட்டு இருந்தது. தற்போது 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 53 புலிகள் இருக்கிறது. இந்த புலிகள் காப்பகம் தொடங்கி கடந்த ஆண்டுன் 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையடுத்து பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. இந்த விழாவை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA), சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF) கடந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மைசூருக்கு சென்றார். அப்படி சென்ற பிரதமர் நரேந்திர மோடி மைசூருவில் உள்ள ரேடிசன் ப்ளூ பிளாசா என்ற நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி அன்று இரவு தங்கி ஓய்வெடுத்தார். அதன்பின்னர் மறுநாள் காலை அந்த நட்சத்திர ஓட்டலில் இருந்து காரில் ஓவெல் மைதானத்திற்கு பிரதமர் மோடி சென்றார். பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மேலுகாமனஹள்ளிக்கு சென்றார்.
பின்னர் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்ற பிரதமர் மோடி வனப்பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரம் ஜீப் சஃபாரி செய்து வனவிலங்களை பார்வையிட்டார். பந்திப்பூர் காப்பகத்தில் புலிகள் மற்றும் யானைகள் தவிர, கரடிகள், இந்திய மலைப்பாம்புகள், குள்ளநரிகள், நான்கு கொம்பு மான்கள் உள்ளிட்ட பல உயிரினங்களை பிரதமர் மோடி தனது ஜீப் சஃபாரியின்போது பார்வையிட்டார்.
இதை தொடர்ந்து புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சென்றார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏப்ரல் 9 - 11 வரையில் ரூ. 3 கோடி செலவில் முடிக்குமாறும், அந்த செலவுக்கான தொகையை மத்திய அரசு வழங்கும் என்று கர்நாடகா வனத்துறைக்கு உறுதியளிக்கப்பட்டதாம்.
அதன்படிதான், நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த மோடி, மைசூருவிலுள்ள ரேடிசன் ப்ளூ பிளாசா (Radisson Blu Plaza) நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து, பின்னர் அங்கிருந்து நிகழ்ச்சிக்கு சென்று வந்தார். நிகழ்ச்சியெல்லாம் முடிந்த பிறகு செலவானது திட்டமிடப்பட்ட தொகையைத் தாண்டி மொத்தமாக ரூ.6.33 கோடியில் வந்து நின்றதாக கூறப்படுகிறது. மத்திய அரசு தருவதாகக் கூறிய ரூ.3 கோடி மட்டும் மாநில அரசுக்கு தரப்பட்டிருக்கிறது. மீதம், ரூ.3.33 கோடி கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதில், ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் மோடி வந்து சென்றதற்கான பில் மட்டும் ரூ.80.6 லட்சம் என்று கூறப்படுகிறது. 80 லட்சம் வாடகை பாக்கியை இதுவரை கர்நாடகா வனத்துறை செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து வாடகை பாக்கியை செலுத்த தவறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ரேடிசன் ப்ளூ பிளாசா நட்சத்திர ஓட்டல் நிர்வாகம் எச்சரித்தது.
ரேடிசன் ப்ளூ பிளாசாவின் பொது மேலாளர், வனத்துறை அதிகாரி பசவராஜுக்கு மே 21, 2024 அன்று கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் "எங்கள் ஹோட்டல் சேவைகளைப் பயன்படுத்திய 12 மாதங்களுக்குப் பிறகும்" பில்கள் இன்று வரை செலுத்தப்படவில்லை. தொடர்ச்சியாக கடிதம் மூலம் வலியுறுத்தியும் இந்த பில்கள் செலுத்தப்படாமல் உள்ளன. நிலுவையில் உள்ள பாக்கிகளுக்கு ஆண்டுக்கு 18% தாமதமாக செலுத்தும் வட்டியாக ₹12.09 லட்சத்தை (தாமதமாக செலுத்துவதற்கு) சேர்த்து தர வேண்டும். ஜூன் 1, 2024க்குள் நிலுவைத் தொகையை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் நிலுவைத் தொகை ரூ.3.33 கோடியை நினைவூட்டி , கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NTCA ) துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரலுக்கு கர்நாடக முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் கடிதம் எழுதயிருந்தார். ஆனால், ரேடிசன் ப்ளூ பிளாசா ஹோட்டலில் மோடி வந்து சென்றதற்கான செலவை மாநில அரசுதான் செலுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி 12-ம் தேதி கர்நாடக அரசுக்கு NTCA பதில் கடிதம் எழுதியதாம்.
இதனிடையே கடந்த மார்ச் 22-ம் தேதி கர்நாடகாவின் தற்போதைய முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் சுபாஷ் கே.மல்கேடே, ரேடிசன் ப்ளூ பிளாசாவில் செலுத்த வேண்டிய தொகையையும் சேர்த்து நிலுவையிலிருக்கும் ரூ.3.33 கோடியையும் செலுத்துமாறு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு கடிதம் எழுதினாராம். ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே ரேடிசன் ப்ளூ பிளாசா நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
இதைத் தொடா்ந்து பிரச்னைக்கு சுமூக தீா்வு காணப்படும் என்று மாநில வனத்துறை அமைச்சா் ஈஸ்வா் கண்ட்ரே அறிவித்துள்ளதுடன், ரூ.80 லட்சத்தை கா்நாடக அரசே செலுத்தும் என்று கூறியுள்ளார்.
இது பற்றி வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறுகையில், "மைசூர்-பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 50 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு பிரதமர் மோடி சென்றார். அந்த நேரத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தது. தேர்தலும் அறிவிக்கப்பட்டது. அப்போது அறிவிக்கப்பட்ட திட்டம், முற்றிலும் மத்திய அரசின் திட்டமாகும். ஆரம்பத்தில், அவர்கள் சுமார் ₹ 3 கோடி செலவழிக்க திட்டமிட்டார்கள். ஆனால் செலவு சுமார் ₹ 6.33 கோடி ஆகி விட்டது. இதில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திடம் இருந்து, 3.3 கோடி ரூபாய் பாக்கி வர வேண்டி உள்ளது.
இதற்காக மாநில அரசின் வனத்துறை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு கடிதமும் எழுதியிருந்தது. இந்த விவாகரத்தில் சுமூக தீர்வு காண விரும்புகிறோம். ஹோட்டல் கட்டணத்தை (ரூ. 80 லட்சம்)கர்நாடகா அரசே திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்கள். இதன்படி நாங்கள் திருப்பிச் செலுத்த முடிவு செய்துள்ளோம். எனவே, எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று .அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே கூறினார்.
-
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications