"இனி தினசரி 10 மணி நேரம் வேலை செய்யணும்.." ரூல்ஸ் மாற்றும் கர்நாடக அரசு! கொந்தளிக்கும் ஐடி ஊழியர்கள்
பெங்களூர்: ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களின் தினசரி வேலை நேரத்தை அதிகரிக்கக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதற்குத் தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்றும், ஒர்க் லைஃப் பேலன்ஸை கெடுக்கும் என்றும் விமர்சித்துள்ளனர்.
இந்தியாவின் ஐடி தலைநகராக இப்போது பெங்களூர் இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெங்களூரில் தான் அமைந்துள்ளன. இதற்கிடையே ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களின் தினசரி வேலை நேரத்தை அதிகரிக்கக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வேலை நேரத்தை அதிகரிக்கும் கர்நாடகா
தற்போது கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தின்படி, தினசரி வேலை நேரம் 9 மணி நேரமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஓவர் டைம் பார்த்தாலும் கூடுதலாக ஒரு மணி நேரம் மட்டுமே பார்க்க வேண்டும் என்று விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூன்று மாதங்களில் அதிகபட்சமாக 50 மணி நேரம் மட்டுமே ஓவர் டைம் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் அதிகபட்ச வேலைத்தை தினசரி 10 மணி நேரமாக உயர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.. மேலும் ஓவர் டைமில் தினசரி அதிகபட்சம் 12 மணி நேரம் வரை வேலை செய்யலாம். மூன்று மாதங்களில் அனுமதிக்கப்படும் மொத்த ஓவர் டைம் நேரமும் 50 மணி நேரத்திலிருந்து 144 மணி நேரமாக அதிகரிக்கப்படும்.
ஆந்திரா
ஆந்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு தினசரி வேலை நேரத்தை ஒன்பதிலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க அனுமதித்தது. முதலீட்டை ஈர்க்கவும், பிஸ்னஸ் செய்வதை எளிதாக்கவும் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அரசு சொன்னது என்ன
அப்போது இது தொடர்பாக ஆந்திர அமைச்சர் கே. பார்த்தசாரதி கூறுகையில், "தொழிலாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இருவருக்கும் சாதகமாகத் தொழிலாளர் சட்டங்களை மாற்ற அரசு விரும்புகிறது. முன்பு இருந்த விதிகளின்படி இரவில் பெண்கள் வேலை செய்ய அனுமதி இல்லை. இப்போது சில பாதுகாப்பு விதிகளுடன் வேலை செய்யலாம். நீங்கள் கூடுதலாக வேலை செய்தால், வருமானம் அதிகரிக்கும். குறிப்பாக இந்த மாற்றம் பெண்களுக்குப் பொருளாதார அதிகாரத்தை அளிக்கிறது மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது" என்று தெரிவித்தார்.
ஆனால் இந்த நடவடிக்கைக்கு ஆந்திராவிலேயே எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இது தொழிலாளர்கள் நலனுக்கு எதிரானது என்றும் இது ஊழியர்களை விட நிறுவனங்களுக்கு அதிக நன்மை பயக்கும் என்றும் சிபிஎம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கர்நாடக அரசு
இந்தச் சூழலில் தான் கர்நாடகாவிலும் இந்த முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. கர்நாடக மாநில ஐடி ஊழியர்கள் சங்கம் இந்த யோசனையைக் கடுமையாக எதிர்த்தது. இதை நவீனக் கால அடிமைத்தனம் என்று கர்நாடக ஐடி ஊழியர்கள் சங்கம் சாடியுள்ளது. இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு எதிராக ஊழியர்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.
மிக கடும் எதிர்ப்பு
தினசரி ஓவர்டைம் 12 மணி நேரமாக இருந்தால் இரட்டை ஷிப்ட் முறையைக் கூட பல நிறுவனங்கள் அறிமுகப்படுத்தலாம் என்றும் இது வேலை இழப்புகளுக்கு வழிவகுத்து தொழிலாளர்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் பலரும் விமர்சித்துள்ளனர். வேலை நேரத்தை அதிகரிப்பதற்குப் பதிலாக, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரம் இந்த கூடுதல் வேலை நேரம் குறித்து கர்நாடக அரசு இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்களிடையே விரிவான விவாதத்தை நடத்திய பிறகே இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications