நானே தக் லைப் படம் பார்க்கலாம்னு நினைத்தேன்! இப்போ முடியாது போலயே! நீதிபதி கலகல
பெங்களூர்: தக் லைஃப் படத்தை நானே பார்க்கலாம் என நினைத்தேன். தற்போது பார்க்க முடியாது போலயே என கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நாக பிரச்சின்னா நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.
தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசிய மொழி சார்ந்த கருத்துகள் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், கர்நாடகாவில் இருக்கும் ராஜ்குமார் குடும்பம் எனது குடும்பம். அவர் எனக்காக இங்கு வந்திருக்கிறார்.

இதனால்தான் நான் எனது பேச்சை தொடங்க உயிரே உறவே தமிழே என தொடங்கினேன். தமிழில் இருந்து தோன்றியதுதான் கன்னடம். அதை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நினைக்கிறேன் என தெரிவித்தார். கமலின் இந்த மொழி குறித்த பேச்சுக்கு சிவராஜ்குமார் தலையாட்டி ஆமோதித்தார்.
கமல்ஹாசன் பேசிய பேச்சுக்கு கர்நாடகாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவோ, கமல்ஹாசன், கன்னட மொழியின் வரலாறு தெரியாமல் பேசுகிறார் என கண்டனம் தெரிவித்தார்.
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் மட்டுமே தக் லைஃப் படம் வெளியிட அனுமதிப்போம் என கன்னட அமைப்புகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் கமல்ஹாசனோ மன்னிப்பு கேட்கமாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.
கமலுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த நிலையில் தக் லைப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது என்பதால் கர்நாடகாவில் படம் ரிலீஸாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என கமல்ஹாசன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நாக பிரசன்னா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறுகையில், தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எதன் அடிப்படையில் பேசினீர்கள். அதற்கான ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா இல்லை மொழியியல் வல்லுநரா? உங்கள் (கமல்) பேச்சால் சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அது போல் கர்நாடகாவில் அமைதியின்மையும் உள்ளது. கமலாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது. ரூ 300 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பதாக சொல்லும் நீங்கள், மன்னிப்பு கேட்கலாமே!
மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை பெரிதாகியிருக்காதே, எப்பவோ முடிந்திருக்கும். பேச்சை திரும்ப பெற முடியாது. மன்னிப்பு ஒன்றுதான் தீர்வு. தக் லைப் படத்தை நான் பார்க்க நினைத்தேன். ஆனால் தற்போது அது முடியாது போல! என நீதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் நீங்கள் பணம் சம்பாதிக்க இந்த மாநில போலீஸார் உங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் கமல்ஹாசன் , கர்நாடகா வர்த்தக சபைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கன்னடத்தை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை.
நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனும் நோக்கத்தில்தான் நான் அவ்வாறு பேசினேன். நான் பேசிய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. பொது அமைதியின்மை, விரோதத்திற்கு நான் எப்போதும் இடம் கொடுக்க மாட்டேன். என்னால் சிவராஜ்குமாருக்கு தர்மசங்கடம்.
நான் அவர் மீது உண்மையான பாசத்துடன் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. இதனால் சிவராஜ்குமார் பல்வேறு அவமானங்களை சந்தித்தது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications