10ம் வகுப்பு மாணவனை கட்டிப்பிடித்து.. முத்தம் கொடுத்து போட்டோ ஷூட்! தலைமை ஆசிரியைக்கு நேர்ந்த கதி
பெங்களூர்: கர்நாடகாவில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் இளம் தலைமை ஆசிரியை ஒருவர், நெருக்கமாக போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் சம்பவம் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள முருகமல்ல கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக புஷ்பலதா என்பவர் பணியாற்றி வருகிறார். ஆனால் கடந்த சில நாட்களாக இவரின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. காரணம் இவர் மாணவர்களுடன் நெருக்கமாக பழகுவதாக சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் கல்வி ஆய்வு சுற்றுலாவுக்கு மாணவர்களுடன் புஷ்பலதா சென்றிருக்கிறார்.

அப்போது 10ம் வகுப்பு மாணவனுடன் இந்த ஆசிரியை நெருக்கமாக போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். இது தொடர்பான படங்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் கசிந்த நிலையில், பெரும் பஞ்சாயத்து வெடித்திருக்கிறது. போட்டோ ஷூட்டில் மாணவன், தலைமை ஆசிரியை புஷ்பலதாவை கன்னத்தில் முத்தமிடுவதும், கட்டிப்பிடித்து தூக்கியும் இருக்கிறார். இந்த படங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். ஒரு ஆசிரியராக இருப்பவர் இப்படியெல்லாம் நெருக்கமாக இருப்பது நியாயமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மட்டுமல்லாது இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இந்த படங்கள் சம்பந்தப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களின் பார்வைக்கு சென்ற நிலையில், அவர்கள் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடத்தில் புகார் அளித்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிய கல்வித்துறை, முதற்கட்டமாக புஷ்பலதாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக புஷ்பலதாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாணவனுக்கும் தனக்கும் இருந்த பழக்கம் தாய்-மகன் உறவை போன்றது என்று கூறியுள்ளார். இருப்பினும் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சோஷியல் மீடியாவில் ஏராளமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பள்ளியில் கல்வி சொல்லிக்கொடுக்கும் அசிரியை இப்படி மாணவர்களுடன் நெருக்கமாக நடந்துக்கொள்வது என்பது, மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்று பலர் கூறுகின்றனர். சிலர், இருவருக்கும் இடையே உண்மையாகவே தாய்-மகன் என்கிற உணர்வு இருந்திருக்கலாம். எனவே முழுமையான விசாரணையின்றி எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும் கூறியுள்ளனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications