ஆணுறுப்பை சிதைத்து ரசிகர் கொலை.. சிறையிலடைபட்ட 'சேலஞ்சிங் ஸ்டார்’ தர்ஷன்..ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
பெங்களூரு: தனது தோழியும் நடிகையுமான பவித்ராவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரசிகரான ரேணுகா சுவாமியை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக இந்த இடைக்கால ஜாமீன் வழங்குவதாக நீதிபதி குறிப்பிட்டு இருக்கிறார்.
கன்னட திரை ரசிகர்களால் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் தர்ஷன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கன்னட திரையுலகில் நடிகையாக வலம் வரும் பவித்ரா கவுடாவுடன் முறை தவறிய பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தொடர்ந்து பவித்ரா கவுடாவுக்கு மிரட்டல்கள் வந்தன. குறிப்பாக ரேணுகா சாமி என்பவர் பவித்ரா கவுடாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் நிலையில் குழந்தைகளை விட்டுவிட்டு பவித்ரா கவுடாவுடன் தர்ஷன் இருப்பதை விரும்பாத அவரது தீவிர ரசிகரான ரேணுகா சாமி, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். மேலும் ஆபாச புகைப்படங்களை, செய்திகளையும் அனுப்பி வந்துள்ளார். ரேணுகாசாமி, நடிகை பவித்ராவுக்கு இன்ஸ்டா தளத்தில் பவித்ர கவுடா என்ற பெயரில் மெசேஜ் செய்ததும், அதில் நடிகையின் தீவிர ரசிகர் என்றும், உடலுறவு கொள்ள வருமாறு அழைப்பு விடுத்ததும் தொடர்ந்து தனது ஆபாச புகைப்படத்தை அனுப்பியதே கொலைக்கான மூல காரணம் எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து தனது மேனேஜர் மூலம் ரேணுகா சாமியுடன் பெண் போல பேசி அவரது விவரங்களைக் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா கவுடா இது குறித்து நடிகர் தர்ஷனிடம் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து தனது மேனேஜர் மூலம் ரேணுகா சாமியுடன் பெண் போல பேசி அவரது விவரங்களைக் கண்டுபிடித்துள்ளார் தர்ஷன். இதை அடுத்து தனது ரசிகர் மன்ற தலைவரான ராகவேந்திரா மூலம் ரேணுகா சாமியை, சித்ரதுர்கா பகுதியில் இருந்து பெங்களூருக்கு வரவழைத்து இருக்கிறார் தர்ஷன்.
தொடர்ந்து அவரை தனியாக அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி இரும்பு கம்பியால் அடித்து உதைத்துள்ளனர். பவித்ரா கவுடாவும் அவரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரேணுகா சாமி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மறைக்கப்பட்டது. தொடர்ந்து ரேணுகா சாமியை காணவில்லை என புகாரை தொடர்ந்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கின் குற்ற பத்திரிக்கை பெங்களூர் 29ஆவது முதன்மை அமர்வு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும், தர்ஷன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். வழக்கில் மொத்தம் 231 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பெங்களூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 23ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், தர்ஷனுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு ஆட்சேபனை தெரிவிக்க வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தர்ஷன் அளித்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனக்கு கடுமையான முதுகு வலி இருப்பதாகவும் அதனால் சிகிச்சை பெறுவதற்காக இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என தர்ஷன் தரப்பில் முறையிடப்பட்டது. இதனையடுத்து தர்ஷனுக்கு சிகிச்சைக்காக இடைக்கால ஜாமின் வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து இன்னும் சில மணி நேரங்களில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு தர்ஷன் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர் அவரது ரசிகர்கள்..
-
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார் -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications