ஜக்கிக்கு அடுத்த “டென்சன்”.. திரண்டு வந்த மக்கள்! கர்நாடகாவில் ஈஷா யோகா மையம் திறக்க இடைக்கால தடை

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டம் நந்தி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தையும் அதில் அமைக்கப்பட்டு இருக்கும் ஆதி யோகி சிவன் சிலையையும் வரும் 15 ஆம் தேதி திறக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்து இருக்கிறது.

கர்நாடகா தலைநகர் பெங்களூருவை அடுத்து இருக்கும் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் அமைந்து இருக்கிறது நந்தி மலை. இதன் அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தின் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் உயரமான ஆதியோகி சிவன் சிலையை போல் கர்நாடகாவிலும் 112 அடி உயர பெரிய ஆதியோகி சிவன் சிலை நிறுவப்பட்டு இருக்கிறது.

 கர்நாடகா ஈஷா யோகா மையம்

கர்நாடகா ஈஷா யோகா மையம்

கர்நாடகாவில் புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் ஈஷா யோகா மையத்தையும், ஆதியோகி சிலையையும் ஜனவரி 15 ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் விழா நடத்தி திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதில் இந்திய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்று சிலையை திறந்து வைக்க உள்ளார் என அறிவிப்பு வெளியானது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அத்துடன் தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள், ஆன்மீக வாதிகள், முக்கிய பிரமுகர்கள் என பலருக்கு இந்த ஈஷா யோகா மைய விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு உல்ளது.

 கிராம மக்கள் வழக்கு

கிராம மக்கள் வழக்கு


மாநில அரசு ஈஷா யோகா மையத்துக்கு சட்டவிரோதமாக நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்ததாகவும், இதனால் நந்தி மலை அடிவாரத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கியாத்தப்பா மற்றும் சிக்கபள்ளாபூரில் உள்ள கிராம மக்கள் இணைந்து உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

16 பேர் மனுவில் இணைப்பு

16 பேர் மனுவில் இணைப்பு

மத்திய சுற்றுச்சூழல்துறை, மத்திய வனத்துறை, கர்நாடகா மாநில அரசு, வன பாதுகாப்பு இயக்குநர், ஈஷா யோகா மையம் உள்ளிட்ட 16 பேர் இந்த மனுவில் இணைக்கப்பட்டு உள்ளனர். இந்த பகுதியில் ஈஷா யோகா மையத்தை அமைக்க அனுமதித்தது, சட்டவிரோதம் என்றும், இது நந்தி மலையின் சூழலியலை அழித்துவிடும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சட்டவிதிகள் மீறல்

சட்டவிதிகள் மீறல்

பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த நந்தி மலையில், நீர் நிலைகள், அருவிகள் இருப்பதாகவும் இந்த கட்டுமானத்தாலும், அதனை திறப்பதால் உருவாகும் வணிக ரீதியான நடவடிக்கையால் இவை அழிந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வனப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், கால்நடைகள், செம்மறி ஆடுகள், வன விலங்குகள் இந்த மலையடிவாரத்தில் அதிகம் வசிக்கும் நிலையில் இதற்கு அனுமதியளித்தது சுற்றுச்சூழல் சட்டங்களை மீறும் செயல் என அவர்கள் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

இடைக்கால தடை

இடைக்கால தடை

குறிப்பாக வடக்கு பென்னாறு மற்றும் தெற்கு பென்னாறு நந்தி மலையில் இருந்துதான் உருவாகுவதாகவும், ஈஷா யோகா மையத்தில் அது பெருமளவில் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், ஈஷா யோகா மையம் தற்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டு, புதிய பணிகளை மேற்கொள்ளவும், ஈஷா யோகா மையத்தை திறக்கவும் இடைக்கால தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்க கர்நாடகா அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+