ச்சீ! இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு டார்ச்சர்! செக்ஷன் 377இல் ஆக்ஷன் எடுங்க! கர்நாடக ஐகோர்ட் பரபர

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கணவர் மீது மனைவி அளித்த புகாரை விசாரித்த கர்நாடக நீதிமன்றம் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இளம் பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் தனது கணவர் தன்னை இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்தியதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கைக் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா விசாரணை செய்து வந்தார். விசாரணை முழுமையாக முடிந்துள்ள நிலையில், இந்த வழக்கில் முக்கிய உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.

டார்ச்சர்

டார்ச்சர்

இளம் பெண் தனது புகாரில் இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்தால் தனது கணவர் தன்னை சித்ரவதை செய்து தாக்கியதாகவும் குறிப்பிட்டார். மேலும், தனது அந்தரங்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது தந்தை மற்றும் சில நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக்கில் பரப்பியதாகவும் புகாரில் கூறி இருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு தான் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

 போலீசார்

போலீசார்

போலீசாரின் குற்றப்பத்திரிகையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) அல்லது தகவல் மற்றும் தொழில்நுட்ப (ஐடி) சட்டம், 2000இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக, 498 ஏ குடும்ப வன்முறை என்ற பிரிவில் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முறையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யாததே விசாரணை எவ்வளவு தரக்குறைவாக இருந்தது என்பதை வெளிப்படுத்துகிறதாக நீதிபதி நாகபிரசன்னா அதிருப்தி தெரிவித்தார்.

 குற்றப்பத்திரிக்கை

குற்றப்பத்திரிக்கை

இந்த வழக்கில் நீதிபதி எம்.நாகபிரசன்னா முக்கிய தீர்ப்பை வழங்கி உள்ளார். அதில் அவர், "புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதிகார போலீஸ் விசாரணைக்குப் பின் ஐபிசி 498A இன் கீழ் ஒரு குற்றத்திற்காக மட்டுமே குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை மிகவும் தரக்குறைவாக இருப்பதால், இந்த விஷயத்தில் மேலும் விசாரணை தேவை.

 கூடுதல் விசாரணை

கூடுதல் விசாரணை

இந்த விவகாரத்தில் டிஜிபி ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்த வேண்டும். தரமற்ற விசாரணை நடத்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது! இந்த வழக்கில் மீண்டும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கை முறையாக விசாரிக்க வேறு சில அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 என்ன புகார்

என்ன புகார்

இந்த விவகாரத்தில் தொடர்புடைய இருவரும் 2013இல் மும்பை ஐஐயில் பிஎச்டி படிக்கும் போது நண்பர்கள் ஆகி உள்ளனர். இருவரும் 2015இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான உடனேயே, கணவர் இயற்கைக்கு மாறான உடலுறவுக்கு வற்புறுத்தத் தொடங்கி உள்ளார். இதற்கு மறுத்ததால் மனைவியைத் தாக்கியும் உள்ளார். இதனால் பெற்றோர் வீட்டிற்கு சென்ற மனைவியைச் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார், ஆனால் அதன் பின்னரும் மற்ற ஆண்கள் உடன் உடலுறவு வைத்துக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்.

 கொடூர கணவர்

கொடூர கணவர்

கடந்த ஜனவரி 4, 2016ஆம் தேதி அப்பெண் கணவரிடம் இருந்து பிரிந்து சென்றுள்ளார். பெற்றோரிடம் இருந்த திரும்ப வர மறுத்ததால், அப்பெண்ணின் ஆபாச போட்டோ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி உள்ளார். இந்த குற்றச்சாட்டுகளைக் கவனத்தில் கொண்ட நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மற்றும் வாக்குமூலங்களை வைத்துப் பார்க்கும் போது, ஐபிசியின் 377 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் தனது உத்தரவில் கூறி உள்ளது.

 கூடுதல் குற்றப்பத்திரிகை

கூடுதல் குற்றப்பத்திரிகை

இந்த விவகாரத்தில் கணவர் மீது முழுமையாக விசாரணை நடத்தி, இரண்டு மாதங்களுக்குள் கூடுதல் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். தன் மீதான குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரிய கணவர் மனுவையும் நீதிபதி நிராகரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+