நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துங்க.. மத்திய, மாநில அரசுகளுக்கு கர்நாடக ஹைகோர்ட் யோசனை
பெங்களூர்: இந்து மதங்களில் பெண்களுக்கு சொத்தில் பங்கு உள்ளது என்றும், ஆனால் இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்கப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள கர்நாடக நீதிமன்றம், எல்லாருக்கும் சம உரிமை கொடுக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளது. மேலும், சாதி, மதத்தை தாண்டி அனைவரும் சமம் என்ற கனவை இதன் மூலம் அடைய முடியும் என்று கூறியுள்ளது.
மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முயன்று வருகிறது. மதங்கள், பழக்கவழக்கங்கள், பாரம்பரியம் அடிப்படையிலான தனிநபர் சட்டங்களை நீக்கிவிட்டு அனைவருக்கும் பொதுவான சட்டத்தை கொண்டு வருவது தான் இந்த பொது சிவில் சட்டம். Uniform Civil Code அல்லது Common Civil Code என அழைக்கப்படும் இந்த சட்டமானது தற்போது கோவா, உத்தரகாண்டில் அமலில் இருக்கிறது.

இந்த நிலையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்றால் பொது சிவில் சட்டம் அவசியம் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு ஒன்றின்போது இது தொடர்பாக நீதிபதி கூறியதாவது:-
அரசியல் அமைப்பு சட்டம் 44 இன் படி, நம் நாட்டில் ஒரே மாதியாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அவசியம் ஆகும். இந்த சட்டத்தினை அமல்படுத்தினால், நாடு முழுக்க அனைவருக்கும் நியாமானது ஒரே போல கிடைக்கும். சட்டமேதை அம்பேத்கர் வகுத்து தந்துள்ள அரசியலமைப்பு சட்டமும் இதைத் தான் சொல்கிறது. பொதுசிவில் சட்டத்தினை அமல்படுத்தவதனால், அவர்களுக்கான நியாயத்தை நம்மால் கொடுக்க முடியும்.
சாதி மதம் தாண்டி அனைவரும் சமம் என்ற கனவு நிறைவேற இந்த பொது சிவில் சட்டம் அவசியமாகும். அப்போதுதான் அனைவருக்கும் சமமான பதவி, அனைத்து பிரிவு வாய்ப்புகள் கிடைக்கும். அனைத்து பெண்களும் சமம் என்று வரும்போது, மதத்தின் அடிப்படையில் மட்டும் எப்படி பெண்கள் பிரிக்கப்படுகிறார்கள். இந்து மதத்தை எடுத்துக்கொண்டால் அவர்கள் பெண்கள் என்றாலும் சொத்தில் பங்கு உண்டும்.
ஆனால் இஸ்லாமிய பெண்கள் சொத்தில் பங்கு கேட்க உரிமை இல்லாமல் இருக்கிறது. இந்து மதத்தில் சொத்தில் சம பங்கு கேட்க பெண்களுக்கு உரிமை உள்ளது. அவ்வாறு இஸ்லாமியத்தில் இல்லை. எனவே அனைவருக்கும் சமமான நீதி, உரிமை கிடைக்க பொது சிவில் சட்டம் அவசியம். இதனை அமல்படுத்துவது குறித்து மத்திய மாநில அரசுகள் முடிவு எடுக்க வேண்டும். கோவா, உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு பதிவாளர், இந்த அமர்வில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் பற்றி தெரிவிக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications