நள்ளிரவு 1 மணிக்கு மது குடித்த காதல் ஜோடி.. ஒரே குடும்பம் காலையில் கிடந்த கோலம்.. ஆடிப்போன கர்நாடகா
பெங்களூரு: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உடன்பிறந்த தம்பி மற்றும் தங்கையை அண்ணனே வாளால் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது?
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவுக்கு உட்பட்டது குந்தச்சேரி என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்து, குன்ஹாராம் மற்றும் யசோதா.. இவர்கள் 3 பேருமே உறவு முறையில் அண்ணன், தம்பி, தங்கை ஆவர். இவர்களில் 64 வயதான சந்து மூத்தவர், 47 வயதான குன்ஹாராம் தம்பி, தங்கை யசோதாவுக்கு 45 வயதாகிறது.. யசோதா திருமணமே செய்து கொள்ளாமல் தனியாக வசித்து வந்தார்..

கர்நாடகா மடிகேரி சம்பவம்
சந்து மற்றும் குன்ஹாராம் ஆகிய இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக தங்களது குடும்பங்களுடன் வசித்து வந்தனர்.. இந்நிலையில் குன்ஹாராம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி கல்யாணியை பிரிந்து தனியாக வாழத் தொடங்கினார்.. தனியாக வசித்து வந்த தங்கை யசோதாவிற்கும், மனைவியை பிரிந்த தம்பி குன்ஹாராமிற்கும் இடையே எதிர்பாராத விதமாக பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஒரு வாடகை வீட்டை எடுத்து கணவன் - மனைவி போலவே ஒன்றாக வசிக்கத் தொடங்கினர்..
நள்ளிரவில் மது அருந்திய 3 பேர்
உறவுமுறையில் தம்பி, தங்கை என்பதால், இத்தகைய செயலில் அவர்கள் ஈடுபடுவதை அண்ணன் சந்துவால் ஜீரணிக்க முடியவில்லை.. குடும்பத்தின் கவுரவம் பாதிக்கப்படுவதாக கருதிய அவர், இந்த கள்ளக்காதல் உறவை உடனே கைவிடும்படி தம்பி மற்றும் தங்கையை பலமுறை எச்சரித்துள்ளார்.. ஆனால் அவர்கள் சந்துவின் பேச்சை கேட்கவில்லை.. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது..சம்பவத்தன்று இரவு, சந்து, குன்ஹாராம் மற்றும் யசோதா ஆகிய 3 பேரும் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர்.. அப்போது மீண்டும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக பேச்சு எழ, அது பெரிய வாக்குவாதமாக உருவெடுத்தது..
நள்ளிரவில் கொடுமை
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த 3 பேருமே ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர்.. இதில் மிகுந்த கோபமடைந்த சந்து, தனது வீட்டிற்கு சென்று அங்கிருந்த கூர்மையான வாளை எடுத்து வந்து தம்பி மற்றும் தங்கையை சரமாரியாக வெட்டினார்.. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குன்ஹாராமும் யசோதாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.. கொலை செய்த கையோடு சந்து அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்..மறுநாள் காலை தம்பியும் தங்கையும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்..
அதிர்ச்சி வாக்குமூலம்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. பிந்துமணி மற்றும் பாகமண்டலா போலீசார் உடல்களைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.. அப்போதுதான் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மற்றொரு திடுக்கிடும் தகவலும் வெளியானது.. அதாவது, யசோதா மீது அண்ணன் சந்துவிற்கும் ஒரு கண் இருந்ததாகவும், ஆனால் அவர் தனது தம்பியுடன் நெருக்கமாக இருந்ததை பொறுத்துக்கொள்ள முடியாமலேயே இந்த ஆத்திரத்தில் கொலையைச் செய்ததும் தெரியவந்தது.. தலைமறைவாக இருந்த சந்துவை போலீசார் நேற்று மதியம் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..!!
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications