மிரட்டி ஓரினச் சேர்க்கை.. பிரஜ்வல் சகோதரர் கர்நாடகா எம்.எல்.சி. சூரஜ் ரேவண்ணா அதிரடி கைது!
பெங்களூர்: ஜேடிஎஸ் கட்சித் தொண்டர் சேத்தனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கர்நாடகா மாநில எம்.எல்.சி சூரஜ் ரேவண்ணா அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டார். கர்நாடகா முன்னாள் அமைச்சர் ரேவண்ணா (முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன் - மத்திய அமைச்சர் குமாரசாமி சக்போதரர்) மகன் சூரஜ். இவரது சகோதரர் பிரஜ்வல் ரேவண்ணா 3,000 ஆபாச வீடியோ விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகா முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகன்கள் பிரஜ்வல், சூரஜ். இவர்களில் பிரஜ்வல், ஹாசன் தொகுதி எம்பியாக இருந்தவர். தற்போது முடிவடைந்த லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் பிரஜ்வல். லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக பிரஜ்வல் எடுத்து வைத்திருந்த 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பியது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பி ஓடினார்.

பிரஜ்வல் மீது புகார் தெரிவித்த பெண்ணை கடத்தி சித்ரவதை செய்ததாக அவரது தந்தை ரேவண்ணா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் அவர் விடுதலையானார். பிரஜ்வல் தாயார் பவானியும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரஜ்வல் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரஜ்வல் சகோதரர் சூரஜ் மீது ஓரினச் சேர்க்கை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் தொண்டர் சேத்தன் என்பவர் இந்த புகாரைத் தெரிவித்தார். முதலில் இது பணம் பறிக்க சேத்தன் கொடுத்த புகார்; ரூ5 கோடி பேரம் பேசினார் சேத்தன் என சூரஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சேத்தன், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று பெங்களூரில் கர்நாடகா மாநில டிஜிபியிடம் சூரஜ் ரேவண்ணா மீது ஓரினச் சேர்க்கை புகார் கொடுத்தார் சேத்தன். இதனடிப்படையில் சூரஜ் ரேவண்ணா மீதும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அதாவது,
ஐபிசி 377-வது பிரிவு - இயற்கைக்கு மாறான உறவு
ஐபிசி 342-வது பிரிவு - சட்டவிரோதமாக அடைத்து வவைத்தல்
ஐபிசி 506-வது பிரிவு - மிரட்டல்
ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சூரஜ் ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் சூரஜ் ரேவண்ணா, ஓரினச் சேர்க்கைக்காக தம்மை மிரட்டிய ஆடியோ இருப்பதாகவும் சேத்தன் கூறியிருந்தார். இதனையடுத்து ஹாசன் போலீசார் சூரஜ் ரேவண்ணாவை நேற்று விசாரணைக்கு அழைத்தனர். அப்போது சூரஜ் ரேவண்ணாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. ரேவண்ணாவின் செல்போனையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று சூரஜ் ரேவண்ணாவை ஹாசன் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாலியல் சர்ச்சையில் ரேவண்ணாவின் இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications