போச்சா.. போச்சா... செல்போன் பேச்சு லீக்- மகனால் முதல்வர் பதவி அம்போவாகுமோ? பதற்றத்தில் சித்தராமையா!
பெங்களூர்: அரசு அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையாவும் எந்த பொறுப்பிலுமே இல்லாத மகன் யதீந்திராவும் பேசும் செல்போன் உரையாடல்கள் அடங்கிய வீடியோ பதிவு கர்நாடகா மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளன. இந்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்ட சித்தராமையா, பணி மாறுதல்களுக்கு பணம் பெற்றது நிரூபிக்கப்பட்டால் அரசியலைவிட்டு விலகுகிறேன் என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா பதவி ஏற்ற காலத்தில் இருந்தே ஆட்சியை கவிழ்ப்பதில் பாஜக முனைப்பு காட்டுகிறது. தற்போது பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது உள்ளிட்ட பேரங்களை பாஜக- மதச்சார்பற்ற ஜனதா தளம் மும்முரமாக நடத்துகிறது என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டு. லோக்சபா தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்கிறது பாஜக கூட்டணி.

செல்போன் பேச்சு லீக்: இந்த களேபரங்களுக்கு நடுவே முதல்வர் சித்தராமையா, மகன் யதீந்திரா இருவரும் அரசு அதிகாரிகள் பணிமாற்றம் தொடர்பாக பேசும் செல்போன் உரையாடல் வீடியோ ஒன்றை மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியிட்டு பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.
குமாரசாமி: இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த கர்நாடகா முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான குமாரசாமி, எடியூரப்பா முதல்வராக இருந்த அவரது மகன் விஜயேந்திராவை சூப்பர் சிஎம் என விமர்சித்தவர் சித்தராமையா. இப்போது யதீந்திராவின் செல்போன் பேச்சு மூலம் யார் சூப்பர் சிஎம் என்பது தெளிவாகிவிட்டது. இந்த செல்போன் உரையாடல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்றார்.
பாஜக: கர்நாடகா தலித் அணி தலைவர் சலவாதி நாராயணசாமி கூறுகையில், செல்போன் பேச்சு உரையாடல் குறித்து சித்தராமையா என்ன சொல்லப் போகிறார்? சித்தராமையா முதல்வராக பதவி ஏற்ற உறுதி மொழிக்கு எதிராக செயல்படுகிறார்; ஆகையால் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
சித்தராமையா விளக்கம்: இது குறித்து விளக்க அறிக்கை வெளியிட்ட சித்தராமையா, குமாரசாமியின் காமாலை கண்களுக்கு எல்லாமே மஞ்சளாகவே தெரிகிறது. என்னுடைய வருணா தொகுதி மேம்பாட்டு பணிகளை மகன் யதீந்திராதான் கவனித்து வருகிறார். குமாரசாமி அரசியலுக்கு வந்த நாள் முதலே எனக்கு எதிரான தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறார். பணி மாறுதலுக்காக பணம் பெற்றதாக நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகவும் தயார் என கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications