"விட்டுடு.. ப்ளீஸ்" அலறிய பெண்.. ஸ்பீக்கர் சவுண்டை அதிகமாக வைத்து காரில் கடத்தி.. தாலி கட்டிய இளைஞர்
பெண்ணை காரில் கடத்தி கட்டாய தாலி கட்டிய நபர் கைதானார்
பெங்களூரு: மாமன் மகளை காரில் கடத்தி.. வலுக்கட்டாயமாக தாலியும் கட்டியுள்ளார் இளைஞர்.. கடத்தி செல்லும்போது பெண் அலறியதால், அந்த சத்தம் வெளியே கேட்காமல் இருக்க காரில் இருந்த ஸ்பீக்கர் சவுண்டை அதிகமாக வைத்து.. பெண்ணை இம்சை செய்துள்ளார்!
கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அர்சிகேரே என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசித்து வந்தவர் மனு.. 30 வயதாகிறது.. இவரது முறைப்பெண் கல்பனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹசான் பகுதியில் ஒரு டெய்லர் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

ஒரு வருடமாக கல்பனாவை உயிருக்கு உயிராக காதலித்தார் மனு.. தன் காதலை பலமுறை சொல்லியும், கல்பனா அதை ஏற்கவில்லை.. அதனால் அந்த பெண்ணின் வீட்டிலும் சென்று காதலை எடுத்து சொன்னார்.. ஆனாலும் மனுவை யாருக்கும் பிடிக்கவில்லை.. பெண் கொடுக்க இஷ்டம் இல்லை என்று சொல்லிவிட்டனர்.
அதனால் பெண்ணை கடத்தி தாலி கட்டி விட வேண்டியதுதான் என்று மனு ஐடியா பண்ணினார்.. அதன்படி, கடந்த திங்கட்கிழமை கல்பனா வழக்கம் போல டெய்லர் கடைக்கு வேலைக்கு போனார்.. ஆனால் அன்று சாயங்காலம் ஆகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் மகளை தேடினர். எங்குமே கிடைக்கவில்லை.. இதையடுத்து துத்தா போலீஸில் புகார் தந்தனர்.
போலீசாரும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த விசாரித்தனர்.. கல்பனாவை வலுக்கட்டாயமாக மனு காரில் கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது.. நண்பர்களுடன் கல்பனாவை கடத்தி உள்ளார்.. காரில் கல்பனா கதறி உள்ளார்.. ஆனால் அந்த சத்தம் வெளியே கேட்காமல் இருக்க, ஸ்பீக்கரில் பாட்டு சத்தத்தை அதிகமாக வைத்துள்ளனர்.. இதனை நண்பர்களில் ஒருவர் வீடியோவும் எடுத்துள்ளார்.
கல்பனா முரண்டு பிடித்தும், அவரை இழுத்து பிடித்து தாலி கட்டிய மனு, ராமாநகாராவில் உள்ள சொந்தக்காரர் வீட்டில் அடைத்து வைத்திருந்தார்.. அங்கு சென்ற போலீசார் கல்பனாவை மீட்டனர்.. மனு உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.. சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதற்காக பஸ் ஸ்டாண்டில் நிற்கும்போதுதான் கல்பனாவை கடத்தியதாக வாக்குமூலம் தந்தனர்.. இதில் 3 பேர் கைதாகி உள்ளனர்.. இன்னொருவர் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications