அடர்ந்த காட்டில் வசிக்கும் 56 வயது முதியவர்.. காட்டு விலங்குகள் அச்சம். நடந்தது என்ன?
பெங்களூர்: கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் அடர்ந்த காட்டில் 17 ஆண்டுகளாக அவருடைய சொந்த காரில் வசித்து வருகிறார்.
கர்நாடக மாநிலம் மெக்ராஜே லோ கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கியில் ரூ 40 ஆயிரம் கடன் வாங்கினார். இதன் பிறகு இந்தக் கடனை அவரால் அடைக்க முடியவில்லை.
இதனால் அவருக்குச் சொந்தமாக இருந்த 1.5 ஏக்கர் நிலத்தை வங்கி ஏலத்தில் எடுத்துக் கொண்டது. இதனால் மிகவும் மனமுடைந்த இவர் ஆடலேயில் உள்ள சகோதரியின் வீட்டிற்குச் சென்றார்.

சில நாட்கள்
அங்கு சில நாட்களே அவரால் தங்கியிருக்க முடிந்தது. பின்னர் ஆடலே மற்றும் நெக்ரல் கெம்ராஜே ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள அடர்ந்த காட்டில் தனக்குச் சொந்தமானதும் பிடித்தமானதுமான அம்பாசிடர் காரோடு குடிபெயர்ந்தார். பிறகு அங்கேயே தனது வாழ்க்கையை நடத்த ஆரம்பித்துவிட்டார். மழை, வெயிலில் இருந்து காரை காக்க பிளாஸ்டிக் ஷீட் போட்டுள்ளார். பல ஆண்டுகளாகக் காட்டிலேயே வசித்து வரும் இவரிடம் ஒரு செட் ஆடைகள், ஒரு ஜோடி செருப்பு, ஒரு சைக்கிள் ஆகியவையே உள்ளன.

இந்தி பாடல்கள்
மேலும் மிகவும் பழமையான வானொலிப் பெட்டி ஒன்றையும் வைத்துள்ளார். அதில் இந்தி பாடல்களை கேட்க பிடிக்கும் என்கிறார். காட்டில் கிடைக்கும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கூடைகளைச் செய்து அவற்றை அருகே இருக்கும் கிராமத்தில் விற்பனை செய்து வருகிறார். இதற்கு பணம் எதுவும் வாங்காமல், அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை போன்ற மளிகைப் பொருட்களைப் பண்டமாற்று முறையில் வாங்கி தன்னுடைய தினசரி வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

நிலத்தை
காட்டில் தனியாக வாழ்ந்து வரும் இவருக்கு எப்படியாவது தனது நிலத்தை மீட்க வேண்டும் என்பதுதான். மேலும் வங்கியில் வாங்கிய கடன், நிலம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக வைத்துள்ளார். இவர் காட்டில் அமைதியாக வாழ்ந்து வருவதால் வனத்துறையும் இவரை எந்த தொந்தரவு செய்யாமல் அவர் போக்கிலேயே விட்டுவைத்தனர்.

17 ஆண்டுகள்
இது குறித்து சந்திரசேகர் கூறுகையில், 17 ஆண்டுகளாக நான் காட்டில் இருந்தாலும் ஒரு மூங்கிலை கூட வெட்டியது இல்லை. உடைத்ததும் இல்லை. சிறிய செடியை வெட்டினாலும் என் மீது வனத்துறை வைத்திருக்கும் நம்பிக்கையை நான் இழந்துவிடுவேன். தனக்கு ஆதார் அட்டை இல்லை. எனக்கு அரந்தோடு கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தினார்.

லாக்டவுன்
காட்டு யானைகள் நான் வசிக்கும் இடத்தை விசிட் அடித்துவிட்டது. காட்டு பன்றி, சிறுத்தை புலி ஆகியவை வந்து பார்த்துவிட்டு சென்றன. லாக்டவுன் காலத்தில் எனக்கு கடினமாக இருந்தது. தண்ணீர், காட்டு பழங்களை உண்டு காலத்தை ஓட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications