கொடுமை! மனைவியின் இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்.. தம்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறு.. இறுதியில் நடந்த துயரம்
பெங்களூர்: கர்நாடகாவில் அளவிற்கு அதிகமாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்த மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனைவி ரீல்ஸ் பார்ப்பதை கணவர் பலமுறை கண்டித்த நிலையில், இந்த விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றிருக்கிறது. அப்போது போலீசார் இருவரிடமும் உறுதிமொழி பெற்றுவிட்டு கண்டித்து அனுப்பிய நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
உலகம் முழுவதும் இளைஞர்கள் பலரும் சோசியல் மீடியாவுக்கு அடிமையாகி வருகின்றனர். ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்டவை விடவும், 30 வீடியோவாக வரும் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் ஆகிய செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரீல்ஸ் பார்ப்பதால், எளிதாக டைம் பாஸ் ஆவதால், இளைஞர்கள் பலரும் ரீல்ஸ் பார்ப்பது அதிகரித்து வருகிறது.

சோசியல் மீடியா மோகம்
தொலைக்காட்சி பார்ப்பதை விடவும் சம கால இளைஞர்கள் மொபைலிலேயே அதிகம் மூழ்கி இருக்கின்றனர். சாதாரணமாக 1 வயது குழந்தை முதலே இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூபில் ரீல்ஸ் பார்க்க தொடங்கிவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலான குழந்தைகளுக்கு சாப்பாடு சாப்பிட வைப்பது மொபைலை காட்டியே அம்மாக்கள் கொடுத்து வருகின்றனர்.
கர்நாடகா தம்பதி
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரில் அளவிற்கு அதிகமாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்த மனைவியை அவரின் கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மங்களூரில் உள்ள ஹிலியானா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ். பெயிண்டர் வேலை செய்யும் இவருக்கு 42 வயதாகிறது. இவருக்கு 27 வயதாகும் பெண்ணான ரேகாவிற்கு திருமணம் நடந்திருக்கிறது.

ரீல்ஸ் பார்ப்பதால் மோதல்
இவர் சங்கர நாராயண பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இதில் ரேகாவிற்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் கணவன் கணேஷ், மனைவி ரேகா இடையே அடிக்கடி சண்டை வந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இவர்களின் சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றிருக்கிறது.
போலீசார் அட்வைஸ்
அப்போது இருவரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு, போலீசார் அட்வைஸ் கொடுத்து அனுப்பி இருக்கின்றனர். இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு கணேஷ் பணி முடித்து இரவில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ரேகா ரீல்ஸ் பார்த்து கொண்டிருப்பதை பார்த்து, கோபமடைந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் மீண்டும் சண்டை வந்துள்ளது.
இறுதியில் துயரம்
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், திடீரென கணேஷ் அரிவாளை எடுத்து ரேகாவின் அரிவாளால் வெட்டி இருக்கிறார். இதனால் அந்த இடத்திலேயே ரேகா துடிதுடித்து இறந்திருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் கணேஷை கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications