‛உங்களை பார்த்துகிட்டே இருக்கணும்’.. இறந்த தந்தை-தாய் நினைவாக மகன் செய்த நெகிழ்ச்சி சம்பவம்! சூப்பர்
கர்நாடாகாவை சேர்ந்த சுரேஷ் தலவார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை கட்டுப்பாட்டு குழு உறுப்பினராக உள்ளார்.
பெங்களூர்: கர்நடகாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தை மற்றும் 2 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தாய் ஆகியோரை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது மகன் ஒருவர் செய்தி செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் முக்கியமான உறவு என்பது தந்தையும், தாயும் தான். இந்த 2 உறவுகளை சார்ந்தே தான் நம் அனைவரின் குழந்தை பருவமும் இளமை பருவத்தை நோக்கி நகர்கிறது. நாம் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றெடுத்தாலும் கூட நம்மீதான தாய், தந்தையின் பாசம் என்பது மட்டும் குறைவதே இல்லை. ஏனென்றால் எத்தனை வயதை எட்டினாலும் நாம் அவர்களுக்கு மகன், மகள்கள் தான்.
இத்தகைய ஈடுசெய்ய முடியாத பெற்றோரை சிலர் வளர்ந்த பிறகு கைவிடும் சம்பவங்கள் அவ்வப்போது நாம் கேள்வி பட்டாலும் கூட வயது முதிர்ந்த பெற்றோரை இன்றும் பல மகன்கள், மகள்கள் பத்திரமாக பார்த்து வருவதை நம்மால் மறுக்க முடியாது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இறந்த பெற்றோர் தங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவரது மகன் செய்த செயல் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

பெலகாவியை சேர்ந்தவர்
பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா சுத்தான்புரா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் தலவார். சமூக சேவகரான இவர் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை கட்டுப்பாட்டு குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். இவரது தந்தை பெயர் குரப்பா வார். தாய் பெயர் பார்வதி. சுரேஷ் தனது பெற்றோர் மீது சிறுவயதில் இருந்தே அதிக பாசம் வைத்திருந்தார்.

காலமான பெற்றோர்
இந்நிலையில் தான் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை குரப்பா இறந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு தாய் பார்வதியும் காலமானார். இவர்கள் 2 பேரின் உடல்களும் கிராமத்தில் உள்ள அவர்களின் தோட்டத்தில் அடக்கம் செய்ய்பபட்டுள்ளது. தாய்-தந்தையின் நினைவாக அவர் கல்லறையும் கட்டியுள்ளார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தனது தாய்-தந்தையின் நினைவு நாளில் ஏராளமானவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.

சிலைகளுடன் கோவில்
இந்நிலையில் தான் தனது தாய்-தந்தைக்கு சிலை அமைக்க வேண்டும் என அவர் முடிவு செய்தார். அதன்படி தற்போது அவர் தனது தந்தை குரப்பா மற்றும் தாய் பார்வதி ஆகியோரின் சிலைகளை தத்ரூபமாக வடித்துள்ளார். மேலும் அந்த சிலைகளை வைக்க அவர் கிராமத்தில் கோவில் கட்டியுள்ளார். மேலும் தினமும் காலை, மாலை வேளைகளில் தனது பெற்றோரை கடவுளாக நினைத்து பூஜைகள் செய்து அவர் தரிசிக்க தொடங்கி உள்ளார். இந்த செயலை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.

காரணம் என்ன?
இதுபற்றி சுரேஷ் கூறுகையில், ‛‛என் பெற்றோர் என்னுடனே இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் விதி அவர்களை பிரித்துவிட்டது. தற்போது அவர்களின் காட்டிய நல்ல சிந்தனை, வழிகள் எனக்கு உதவுகிறது. நான் நன்றாக இருக்கிறேன்.இந்த சமயத்தில் என்னுடன் தாய், தந்தையும் இருக்க வேண்டும், அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் நினைத்தேன். இதனால் இருவருக்கும் சிலை வடித்து கோவிலாக கட்டியுள்ளேன்'' என்றார்.
-
"ஐ லவ் யூ.." அத்துமீறிய பேராசிரியருக்கு செருப்படி.. கர்நாடகாவில் தக்க பாடம் புகட்டிய கல்லூரி மாணவி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications