பெரியவன் நிகான்.. நடு மகன் கேனான்.. சின்னவன் எப்சன்.. வீட்டுக்குப் பேரு கிளிக்.. சூப்பர் குடும்பம்!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்து ஒரு புகைப்பட கலைஞர் கேமரா போன்ற வடிவமைப்பில் கட்டியுள்ள வீடு தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
ஒவ்வொரு மனிதருக்கும் லட்சியங்கள் இருக்கும். அவை சிலருக்கு நிறைவேறும், சிலருக்கு நிறைவேறாது. இவர்கள் கிடைத்ததை வைத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுவர். ஆனால் லட்சியத்தையும் வாழ்நாள் கனவையும் நனவாக்கியவர்கள் மகிழ்ச்சி அடைவர். அப்படி ஒரு சம்பவம்தான் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடகம் மாநிலம் பெலகாவியைச் சேர்ந்தவர் ரவி ஹங்கல் (49). இவர் புகைப்படக் கலை மீது தீராத அன்பு கொண்டவர். இவர் கடந்த 33 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறார். இவரது புகைப்படக் கலை குறித்து அப்பகுதியில் பெரும்பாலானோருக்கு தெரியும்.

வீட்டை கட்ட
அதாவது தனது 16 ஆவது வயது முதல் இவர் புகைப்படம் எடுக்க பழகி வந்துள்ளார். நாளடைவில் மிகப் பெரிய புகைப்பட கலைஞராகியுள்ளார். எல்லாரையும் போல் இவருக்கும் ஒரு கனவு இருந்தது. அதாவது தனது தொழிலை முன்னிலைப்படுத்தி ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பதுதான். அதாவது கேமராவை போல் ஒரு வீட்டை கட்ட விரும்பினார்.

எளிதான காரியம்
இவரது கனவை நனவாக்குவது அந்த அளவுக்கு எளிதான காரியமல்ல. கனவாவது மண்ணாவது என நினைத்து விடும் ஆளும் இல்லை. இவருக்கு மூன்று மகன்கள். அந்த மகன்களுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா. முதல் மகன் பெயர் கெனான் (20), இரண்டாவது மகன் பெயர் நிகான் (18), இளைய மகன் பெயர் எப்சன் (13). மகன்களுக்கு கேமரா பிராண்டுகளின் பெயர்களை வைத்துள்ளார் என்றால் அவருக்கு எந்த அளவுக்கு புகைப்பட கலை மீது ஆர்வம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.

பால்கனியில் லென்ஸ் வடிவம்
சரி விஷயத்துக்கு வருவோம். அவர் கட்ட நினைத்த வீட்டிற்காக இரவு பகல் பாராமல் பல ஆண்டுகளாக பணம் சேமித்து வைத்தார். பின்னர் அண்மையில் கேமரா போன்று வீட்டை கட்டி முடித்துள்ளார். கேமரா போன்று என்றால் அந்த வீட்டின் முகப்பில் லென்ஸ் போன்ற அமைப்பை வைத்துள்ளார். பின்னர் பிலிம்ரோல் போன்ற டிசைன் வைத்துள்ளார். பால்கனிகளுக்கு ரீல் போன்ற அமைப்பை வைத்துள்ளார். வீட்டின் சுவர்களில் மெமரி கார்டு மற்றும் பிலிம் ரோலையும் பிரதான வாயிலில் கேமரா ஷட்டர் போன்ற அமைப்பையும் வைத்துள்ளார்.

புரியவில்லை
3 அடுக்கு மாடியை கட்டிய ரவி, ஒவ்வொரு மாடிக்கும் தனது மகன்களின் பெயரை சூட்டி பொறித்துள்ளார். தனது வீட்டிற்கு கிளிக் என பெயரிட்டுள்ளார். இரவு நேரத்தில் இவரது கிளிக் வீடு வண்ண விளக்குகளால் பிளாஷ் போன்று ஜொலிக்கிறது. இவரது வீட்டின் முன் தினந்தோறும் மக்கள் நின்று செல்பி எடுத்துச் செல்கிறார்கள். இதுகுறித்து கூறுகையில் கேமரா பிராண்டுகளின் பெயர்களை அவர்கள் வளர்ந்தவுடன் வைத்த போது அவர்களுக்கு புரியவில்லை.

மகிழ்ச்சி
வளர்ந்தவுடன் ஏன் பெயர்களை மாற்றுகிறீர்கள் என கேட்டனர். ஆனால் எனது மனைவி கிருபா ராண எனக்கு ஆதரவாக இருந்தார். இந்த பிராண்டுகளை நாம் மிகவும் விரும்பினேன் என கூறியதை அடுத்து என் மகன்களும் புரிந்து கொண்டார்கள். இந்த வீட்டை கட்டுவது மிகவும் சிரமம்தான். ஆனால் இதை கட்டியவர்கள் என்னை புரிந்து கொண்டு கட்டினார்கள். எல்லோரையும் புகைப்படம் எடுக்கும் கலைஞனாகிய என் வீட்டின் முன் ஏராளமானோர் நின்று புகைப்படம் எடுப்பது மகிழ்ச்சி என்றார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications