‛கையில் கத்தி’.. மோடியும் - யோகியும் தான் டார்கெட்டாம்! மிரட்டல் விடுத்தவர் கைது.. ஷாக் வீடியோ
பெங்களூர்: பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் நரம்புகளை வெட்டி கொலை செய்வதாக மிரட்டல் வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் யாதகிரி மாவட்டம் சுராப்பூரா தாலகா ரங்கம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முகமது ரசூல் கடாரே. இவர் ஹைதராபாத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் முகமது ரசூல் கடாரே பேசும் வீடியோ ஒன்று இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தொப்பி அணிந்தும், கருப்பு நிற கண்ணாடி அணிந்தும் அந்த வீடியோவில் பேசும் முகமது ரசூல் கடாரே கொலை மிரட்டல் விடுக்கிறார்.
அதாவது கையில் வைத்திருந்த அவர், ‛‛மோடி.. நீங்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் போன்று மத்தியில் நல்ல ஆட்சியை கொடுக்கவில்லை. நீங்கள் டீ விற்றவர். நீங்கள் பாஜக இன்றி தனி ஆளாக வந்தால் உங்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். மேலும் காங்கிரஸ் ஆட்சி நடந்தால் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நரம்புகள் வெட்டி துண்டிக்கப்படும். காங்கிரசுக்கு ஜிந்தாபாத்'' எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.
மேலும் இந்த வீடியோவில் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத்தை தரம்தாழ்ந்து அவர் விமர்சித்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவ தொடங்கியது. பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடியோ வெளியிட்ட முகமது ரசூல் கடாரேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி ஸ்ரீராம சேனை மாவட்ட தலைவர் சரானு நாயக் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து சுராப்புரா போலீசார் கொலை மிரட்டல், ஆயுதம் வைத்திருத்தல் உள்பட 3 பிரிவுகளில் முகமது ரசூல் கடாரேவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைதும் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications