பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவிலிருந்து வருவோர்.. ஒரு வாரம் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும்.. கர்நாடக அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

பெங்களூரு: கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் இருந்து கர்நாடகாவிற்கு வருவோர் கட்டாயம் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகை இந்த கொரோனா வைரஸ் தான் அட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பு எங்கும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.

தமிழகத்தில் இன்று 1523 பேருக்கு கொரோனா.. கோவை உட்பட இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே 100+ பாதிப்புதமிழகத்தில் இன்று 1523 பேருக்கு கொரோனா.. கோவை உட்பட இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே 100+ பாதிப்பு

இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் பல நாடுகளிலும் ஒரு சில மாதங்கள் வரை கொரோனா கட்டுக்குள் இருப்பதைப் போலத் தோன்றுகிறது. ஆனாலும், திடீரென அங்கெல்லாம் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது.

கேரளாவில் கொரோனா

கேரளாவில் கொரோனா

கேரளாவில் இப்போது அதேதான் நடக்கிறது. கேரள அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால் முதல் அலையை அம்மாநில அரசு விரைவாகக் கட்டுப்படுத்தியது. 2ஆம் அலை சமயத்திலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட போதிலும், கேரள அரசின் சிறப்பான திட்டமிடல் காரணமாகப் பெரிய பாதிப்பு அங்கு ஏற்படவில்லை. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள்ளேயே இருந்தது. இந்தச் சூழலில் கேரளாவில் தற்போது வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

புதிய கட்டுப்பாடுகள்

புதிய கட்டுப்பாடுகள்

இதன் காரணமாக கேரளாவில் இருந்து வருவோருக்கு அண்டை மாநிலங்கள் பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. கேரளாவில் இருந்து வருவோர் RT PCR கொரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது கொரோனா 2 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கேரளாவிலிருந்து கர்நாடகா செல்வோருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரம்

ஒரு வாரம்

அதன்படி கேரளாவிலிருந்து வரும் மக்கள் ஒரு வாரம் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும். அவர்கள் தடுப்பூசி போட்டிருந்தாலும், கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் கட்டாயம் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்களுக்கு RT PCR சோதனை செய்யப்படும். அதில் கொரோனா இல்லை என உறுதியானால் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

Recommended Video

    C.1.2 அடுத்த உருமாறிய Corona.. Vaccine-க்கு கட்டுப்படாது.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை
    கர்நாடக அரசு

    கர்நாடக அரசு

    மேலும், கர்நாடகாவில் பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து செப். 5ஆம் தேதி அறிவிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கேரளாவில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதால், எல்லையோரம் அமைந்துள்ள மாநிலங்களில் மட்டும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. கர்நாடகா - கேரளா எல்லை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் 29 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

    English summary
    Karnataka government on Monday mandated week-long institutional quarantine for people coming from Kerala. Testing on the 7th day has been made compulsory even if persons are vaccinated and hold a negative RT-PCR test.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X