Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யப்பா! 144 கிராம் தங்கம்,ரூ.1 லட்சம் ரொக்கம்.. நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கிய கர்நாடகா பாஜக அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வீட்டில் லட்சுமி பூஜை நடத்தி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கர்நாடகா பாஜக அமைச்சர் ஆனந்த் சிங் பரிசு பெட்டகம் வழங்கி உள்ளார். இதில் 144 கிராம் தங்கம், ரூ.1 லட்சம் ரொக்கம், 1 கிலோ வெள்ளி பொருட்கள், பட்டு சேலை, வேஷ்டி சட்டைகள் இருந்த நிலையில் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் பாஜக, காங்கிரஸ், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்தவர்கள் தீவிரமாக கட்சி பணியாற்ற துவங்கி உள்ளனர்.

துவங்கிய தேர்தல் பணி

துவங்கிய தேர்தல் பணி

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று கட்சிகளை சேர்ந்தவர்கள் தீவிர பிரசாரத்தை இப்போதே துவக்கி விட்டனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் பம்பரமாய் சுற்றி தொகுதியில் தங்களது செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த முயற்சி செய்து வருகின்றனர்.

பாஜக அமைச்சர் ஆனந்த் சிங்

பாஜக அமைச்சர் ஆனந்த் சிங்

இந்நிலையில் தான் கர்நாடகாவை சேர்ந்த பாஜகவின் அமைச்சர் ஆனந்த் சிங்கின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டை சட்டசபை தொகுதியை சேர்ந்த எம்எல்ஏவான இவர் சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார். இவர் வரும் தேர்தலில் மீண்டும் ஒசப்பேட்டேயில் களமிறங்க உள்ளார். இந்நிலையில் தான் தீபாவளியையொட்டி நகராட்சி, பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு கிப்ட் வழங்கி உள்ளார்.

2 வகையான பரிசு பெட்டகங்கள்

2 வகையான பரிசு பெட்டகங்கள்

அதாவது ஆனந்த் சிங் தனது வீட்டில் லட்சுமி பூஜை நடத்துவதாக கூறி பத்திரிகைகள் அடித்து உள்ளாட்சியில் உள்ள உறுப்பினர்களுக்கு வழங்கினார். இதையடுத்து ஆனந்த் சிங் வீட்டில் லட்சுமி பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு விலைமதிப்பு மிக்க பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசு பெட்டகங்கள் 2 வகையாக இருந்தன. நகராட்சி உறுப்பினர்களுக்கு ஒரு வகையான பரிசு பெட்டகமும், பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு இன்னொரு வகையான பரிசு பெட்டகமும் வழங்கப்பட்டுள்ளது.

என்னென்ன பொருட்கள்?

என்னென்ன பொருட்கள்?

நகராட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு பெட்டகத்தில் ரூ.1 லட்சம் ரொக்கம், 144 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி, பட்டுப்புடவை, வேஷ்டி, உலர் பழங்கள் ஆகியவை இருந்தன. கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான பரிசு பெட்டகத்தில் பணத்தின் மதிப்பு கொஞ்சம் குறைவாக இருந்தது. அதோடு தங்கம் இடம்பெறவில்லை. மாறாக பிற பொருட்கள் அனைத்தும் இருந்தன.

எத்தனை பேருக்கு பரிசு?

எத்தனை பேருக்கு பரிசு?

ஒசப்பேட்டை சட்டசபை தொகுதியில் ஒரு நகராட்சி உள்ளது. இங்கு தேர்தலில் தேர்வான 35 உறுப்பினர்களும், ஐந்து நியமன உறுப்பினர்களும் உள்ளன. இவர்கள் தவிர 10 பஞ்சயத்துகளில் மொத்தம் 182 உறுப்பினர்கள் உள்ளன. இவர்களுக்கு தான் ஆனந்த் சிங் பரிசு வழங்கி உள்ளார். இதில் சில உறுப்பினர்கள் பரிசை பெற மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் வேறு சில முக்கிய பிரமுகர்களுக்கும் பரிசு பெட்டகங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி மொத்தம் 250 பேருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

மேலும் ஆனந்த் சிங் வழங்கிய பரிசு பெட்டகங்களின் படங்கள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் ஓட்டுகளுக்காக நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு ஆனந்த் சிங் லஞ்சம் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனந்த் சிங் தரப்பு விளக்கம்

ஆனந்த் சிங் தரப்பு விளக்கம்

இதனை ஆனந்த் சிங் தரப்பு மறுத்துள்ளது. அதாவது ஆண்டுதோறும், ஆனந்த் சிங் லட்சுமி பூஜை நடத்தி பரிசுகள் வழங்குவது வாடிக்கையான ஒன்று தான். ஆனால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் இது சர்ச்சையாகி உள்ளது. ஆனந்த் சிங் வழக்கம்போல் பூஜை நடத்தி பரிசுகள் கொடுத்துள்ளார். இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என ஆனந்த் சிங் தரப்பினர் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+