கர்நாடகா: 22 ஆண்டு தலைமறைவு- என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட நக்சலைட் தலைவர் விக்ரம் கவுடா உடல் தகனம்!
பெங்களூர்: கேரளாவில் தேடப்பட்டு வந்த கர்நாடகா மாநில நக்சலைட் (மாவோயிஸ்ட்) இயக்கத்தின் தலைவர் விக்ரம் கவுடா உடுப்பி அருகே என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். கர்நாடகா போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட விக்ரம் கவுடாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. 114 வழக்குகளில் தேடப்பட்டு வந்த விக்ரம் கவுடா, என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது சரிதான்; இது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்த முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த விக்ரம் கவுடா 22 ஆண்டுகளுக்கு முன்னர் நக்சலைட் இயக்கத்தில் இணைந்தார். இந்த நக்சல்பாரிகள் இயக்கம் தற்போது மாவோயிஸ்டுகள் அமைப்பாக குறிப்பிடப்பட்டு வருகிறது. கேரளா, கர்நாடகாவில் தேடப்பட்டு வந்த விக்ரம் கவுடா, கர்நாடகா மாநில நக்சல் குழுவின் தலைவராகவும் செயல்பட்டவர்.

கர்நாடகா மாநிலம் உடுப்பி ஹெப்ரி கப்வினாலே என்ற பதுங்கியில் விக்ரவும் கவுடா தலைமையில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசார் மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட போலீஸ் தாக்குதலில் விக்ரம் கவுடா சுட்டுக் கொல்லப்பட்டார். 2016-ம் ஆண்டு கேரளா நீலாம்பூர் என்கவுண்ட்டரில் தப்பி ஓடியவர்தான் இந்த விக்ரம் கவுடா. நக்சல் அமைப்பின் மிக முக்கியமான தளபதிதான் இந்த விக்ரம் கவுடா.
உடுப்பி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விக்ரம் கவுடாவின் உடலை அவரது குடும்பத்தினர் நேற்று தகனம் செய்தனர். ஆனால் மாஜி நக்சலைட்டுகள் குழுவினரோ விக்ரம் கவுடா என்கவுண்ட்டர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை கர்நாடகா அரசு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. 22 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த ஒரு நக்சலைட்தான் விக்ரம் கவுடா; அவரை சுட்டுக் கொன்றதை எந்த அடிப்படையில் விசாரிப்பது என கர்நாடகா காவல்துறை அமைச்சர் பரமேஸ்வர் கேள்வி எழுப்பி உள்ளார். இதனிடையே விக்ரம் கவுடாவுடன் பதுங்கி இருந்து தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் நக்சல் தடுப்பு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications