கர்நாடகாவில் இப்படியும் ஒரு பெண்ணா? கல்யாணமாகி 15 நாளில்.. மாப்பிள்ளைக்கு கிறுகிறுன்னு வந்துருச்சு
பெங்களூர்: இளம்பெண் ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.. அந்த இளைஞரும் பெண்ணை உருகி உருகி காதலித்திருக்கிறார். ஆனால், பெண் வேற்று மதத்தை சேர்ந்தவர்.. இதனால், இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.. எனினும் காதல்தான் பெரிது என்று அந்த பெண் முடிவெடுத்தார்.. இதன்காரணமாக உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பறந்தார் அந்த இளைஞர். ஆனால், 15 நாளிலேயே இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. என்ன நடந்தது கர்நாடக மாநிலத்தில்?
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் மைலப்பனஹள்ளி என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் நாகர்ஜுனா.. இவருக்கு 25 வயதாகிறது.. இவர் மற்றொரு மதத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

அச்சமும், ஆபத்தும்
இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்கு நாகர்ஜுனாவின் பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தில் கொந்தளித்து விட்டனர்.. இதனால் மனம்நொந்துபோன காதலர்கள் இருவரும் கடந்த மார்ச் 23-ந் தேதி வீட்டை விட்டுவெளியேறி, திருமணம் செய்துகொண்டனர். பிறகு பெண்ணின் குடும்பத்தினரால் ஆபத்து வரும் என்று அச்சமடைந்தனர்..
சமாதானம் செய்த போலீஸ்
இதனால், கலப்பு திருமணம் செய்த புதுமண தம்பதி, பாதுகாப்பு கேட்டு சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அப்போது இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.. தன்னுடைய பெற்றோர் எவ்வளவோ சொல்லியும்கூட, தன்னுடைய காதல் கணவர்தான் முக்கியம் என்றும் அவருடன்தான் வாழ போவதாகவும் உறுதியாக சொன்னார்.
இதையடுத்து, காதலனுடனேயே இளம்பெண்ணை போலீசார் அனுப்பி வைத்தனர்.. இப்போது திருமணமாகி 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், அந்த புதுப்பெண், மறுபடியும் சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார்.. ஒரு கடிதத்தையும் கைப்பட எழுதி போலீசில் தந்துள்ளார்..
கடிதம் தந்த பெண்
அதில், "நான் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டேன். இந்த அதிர்ச்சியில் என்னுடைய அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், நான் நாகர்ஜுனாவை பிரிந்து என்னுடைய பெற்றோருடனேயே செல்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.. கடிதத்தை ஸ்டேஷனில் தந்துவிட்டு, காதல் கணவரை பிரிந்து அந்த பெண், அவருடைய அம்மா வீட்டுக்கும் சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்த நாகர்ஜுனா, புது மனைவி தன்னை பிரிந்து சென்ற சோகத்தில் மூழ்கியிருக்கிறாராம். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications