அட.. 7 நகரங்களாக பிரிக்கப்படுகிறதா பெங்களூர்? சட்டசபை கூட்டு ஆய்வு குழு பரிந்துரை
பெங்களூர்: கர்நாடக தலைநகரான பெங்களூர் தற்போது ஒரே மாநகராட்சியாக இருக்கிறது. இதனை 7 நகரங்களாக பிரிக்க சட்டசபை கூட்டு ஆய்வு குழு பரிந்துரை செய்திருக்கிறது.
அதன்படி ஒவ்வொரு மாநகராட்சியிலும் குறைந்தது 10 லட்சம் மக்கள் இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத் தலைமையிலான கர்நாடக சட்டமன்ற கூட்டு ஆய்வு குழு இந்த பரிந்துரையை கொடுத்திருக்கிறது. நிர்வாகத்தை பரவலாக்கவும், எளிமையாக்கவும் இது பயன்படும் என குழு தெரிவித்திருக்கிறது. நேற்று இது தொடர்பான அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்த ரிஸ்வான் அர்ஷத்,
"ஒவ்வொரு மாநகராட்சியும் குறைந்தபட்சம் ரூ.300 கோடி அளவுக்கு வருவாயை ஈட்ட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மாநகராட்சியை மெயின்டெயின் செய்ய முடியும். மாநகராட்சிகள் தங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ள போதுமான வருவாயை உருவாக்க வேண்டும். இந்த வருவாய் செலவீனங்களுக்கு போதுமானதாக இருப்பதை உறுதி செய்யவும் வேண்டும்.
அதேபோல புதிய மாநகராட்சிகளில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் 50% அளவுக்கு வேளாண் துறையை சார்ந்து இருந்தால் போதுமானது. மீதமுள்ள 50% வேலைவாய்ப்புகள் வேளாண்துறை தவிர்த்து உருவாக்கப்பட வேண்டும். மாநகராட்சி அமைப்புக்கு ஏற்ப, புதிய மாநகராட்சியில் மேயர் (Mayor), ஆணையர் (Commissioner), இணை ஆணையர் (Joint Commissioner), நிலையான குழுக்கள் (Standing Committees) மற்றும் வார்டு குழுக்கள் (Ward Committees) இருக்க வேண்டும்.
பெங்களூரு நகர்ப்புற பகுதிகளுக்குள் வரும் ஒவ்வொரு மாநகராட்சிக்கும் "Bengaluru" என்ற ஒரே பொதுவான முன் பெயர் இருக்க வேண்டும். உதாரணமாக Bengaluru North City Corporation, Bengaluru South City Corporation இப்படி.
அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும். வறுமையை குறைத்து, ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சிகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். பெங்களூரின் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. கடந்த 2018ல் 78 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 2025ல் 1.5 கோடியாக உயர்ந்திருக்கிறது. புதிய மாநகராட்சிகள் உருவாக்குவது தொடர்பாக நிபுணர்கள் தரப்பிலிருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன" என்று ரிஸ்வான் அர்ஷாத் கூறியுள்ளார்.
மாநகராட்சியின் அமைப்பை பொறுத்தவரை, மேயர் மற்றும் துணை மேயரின் பதவிக்காலம் 30 மாதங்கள். அதாவது 2.5 ஆண்டுகள். நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் எனில், நிர்வாகம் அமைந்த நாளிலிருந்து 6 மாதங்கள் வரை ஆகியிருக்க வேண்டும். அதற்கு முன்னர் கொண்டுவர முடியாது. மாநகராட்சி நிர்வாகத்திற்கான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்தின் (Elected Council) முழு பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறிவிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமான நிறைவேறப்பட்டால், அது நிறைவேறிய 120 நாட்களுக்குள் Greater Bengaluru Authority (GBA) உருவாக்கப்பட வேண்டும். இது மூன்று அமைப்புகளாக இருக்கும். அதாவது,
1. பெருநகர பெங்களூர் ஆணையம் (GBA)
2. மாநகராட்சி நிர்வாகங்கள்(City Corporations)
3. வார்டு குழுக்கள்(Ward Committees )
இதில் பெருநகர பெங்களூர் ஆணையத்தின் (GBA) தலைவராக முதல்வர் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications