Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவசங்களை அள்ளி தந்த சித்தராமையா அரசு.. வேலைக்கு ஆள் கிடைக்கவில்லையாம்! கையை பிசையும் விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா இப்போது விவசாய வேலைக்குப் போதியளவில் தொழிலாளர்கள் கிடைக்காமல் புது பிரச்சினையைச் சந்தித்து வருகிறது. இது அங்கே விவசாயிகளுக்குப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலை அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் காங்கிரஸ் அரசு எதிர்கொண்டது.

 Karnataka plantations faced a Labour shortage some blames poll freebies

இந்தத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சியைப் பிடித்தவுடன் இந்த 5 முக்கிய வாக்குறுதிகளையும் செயல்படுத்தியது. இதற்கிடையே இப்போது அங்கு வேறு ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

விவசாயம்: கர்நாடகாவில் விவசாயம் என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும் நிலையில், அங்கே கடந்த சில காலமாகவே விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காங்கிரஸ் அளித்த இலவசங்களே காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த இலவசங்களால் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் பெரியளவில் வேலைக்கு வருவதில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.

அப்படியே வேலைக்கு வருவோரும் ஊதிய உயர்வு, வேலை நேரத்தைக் குறைப்பது போன்ற சலுகைகளைக் கேட்பதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். கர்நாடகாவில் இப்போது 30 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 5 லட்சம் பேர் காபி தோட்டங்களில் தான் வேலை செய்கிறார்கள். இந்த காபி தோட்டங்கள் ஏற்கனவே ஆள் கிடைக்காமல் திணறி வருகிறதாம்.

ஆள் கிடைக்கவில்லை: கர்நாடக காங்கிரஸ் அரசு அளிக்கும் 10 கிலோ இலவச அரிசி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 2,000, இலவச பேருந்து பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற சலுகைகளே இந்த பற்றாக்குறையை ஏற்படுத்துவதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்து இந்தியக் காபி வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் போஸ் மந்தன்னா கூறுகையில், "கர்நாடக அரசு அறிவித்துள்ள இலவசங்களால் திடீரென்று விவசாயத் தொழிலாளர்களுக்கு இப்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தோட்டத் தொழிலை நடத்துவதே கடினமான ஒன்றாக மாறிவிடும்..

என்ன புகார்: விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏற்கனவே பற்றாக்குறை இருந்த நிலையில், அரசு அறிவித்த இலவசங்கள் நிலைமை மேலும் மோசமாக்கியதாக சிக்கமகளூருவை சேர்ந்த காபி விவசாயி ஸ்ரீ கவுரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ கவுரா மேலும் கூறுகையில், "உள்ளூர் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டனர். நெருக்கடியைச் சமாளிக்க, வெளி மாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த வேண்டியுள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவர்கள் திறமையானவர்கள் அல்ல. இதனால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இது ஒரு மோசமான நிலை" என்று அவர் தெரிவித்தார்.

கர்நாடக அரசின் இலவசங்களே நிலைமையை இந்தளவுக்கு மோசமான ஒன்றாக மாற்றிவிட்டதாகக் கர்நாடக விவசாயிகள் சங்கத் தலைவர் குருபூர் சாந்த குமார் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், "சித்தராமையா அரசு ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டன. இதனால் இரண்டாம் கட்ட நகரங்களில் இருக்கும் தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வருவதில்லை. மன்ரேகா திட்டத்திலும் 120 நாட்களுக்கு வேலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு மிகப் பெரிய தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது" என்றார்.

 Karnataka plantations faced a Labour shortage some blames poll freebies

தொழிலாளர் நலவாரியம்: இதனால் இப்போது வேலைக்கு வரத் தொழிலாளர்கள் சில புதிய கோரிக்கைகளை முன்வைக்கிறார்களாம்.. போனஸ் மற்றும் பிஎஃப் போன்றவற்றை தாண்டி எட்டு மணி நேர வேலைக்கான குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.360ல் இருந்து ரூ.460 ஆக உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

உரிமையாளர்கள் இதுபோல சொன்னாலும் கூட தொழிலாளர் யூனியன்கள் இதை நல்ல ஒரு முடிவாகவே வரவேற்கிறது. காங்கிரஸ் அரசின் இந்த நடவடிக்கையால் நீண்ட காலமாகச் சுரண்டப்பட்டு வந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து தொழிலாளர் நல வாரியத்தினர் கூறுகையில், "தினக் கூலிகளால் தினசரி 13 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியும். இப்போது விலைவாசி உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்தச் சம்பளம் எப்படி குடும்பம் நடத்த பத்தும். எனவே, அரசு இவர்களுக்கு உதவுகிறது. எனவே, இதைப் பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது. தொழிலாளர்களின் நலன் முன்னேறுகிறது என்றே இதை நாம் பார்க்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+