இளம்பெண்கள் தான் குறி..இப்படியும் கூட ஏமாற்றலாமா? மாண்டியாவை மிரள விட்ட மது! ஆனா இது புதுசா இருக்கே!
பெங்களூர்: கர்நாடகாவில் மேட்ரிமோனியல் இணையதளங்கள் வாயிலாக இளம் பெண்களிடம் பழகி சுமார் 60 லட்சம் ரூபாய் பணத்தை பறித்த இளைஞரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அரசு வேலைக்கு பணம் கட்ட வேண்டும் என பெண்களை ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இந்த டிப் டாப் மோசடி இளைஞர்.
உறவினர்கள் புடைசூலா பெண் பார்த்து திருமணம் முடித்த காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. தற்போது எல்லாம் பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் பலர் பேசி பழகி திருமணமும் செய்து கொள்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மேட்ரிமோனியல் எனப்படும் திருமண சேவை இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து அதன் மூலம் திருமணம் செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கெனவே பல நிறுவனங்களும், முகவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறனர்.
ஆனால், மேட்ரிமோனியல் தளங்கள் மூலமாக, சில நேரங்களில் இதில் மோசடிகளும் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருமண தகவல் சேவை இணையதளங்கள் எடுத்தாலும் அவ்வப்போது சில மோசடி சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான். அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகாவில் நடைபெற்று இருக்கிறது. கர்நாடகாவில் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்களிடம் பேசி சுமார் 60 லட்சம் ரூபாயை மோசடி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்த 23 வயதான இளம்பெண் ஒருவர் பிரபல இணையதளம் ஒன்றில் தனக்கு வரன் தேடி இருக்கிறார். தொடர்ந்து அதே இணையதளத்தின் வாயிலாக அறிமுகமான இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இளம்பெண்ணை பயங்கரமாக வர்ணித்து பேசிய அவர் திருமணம் செய்து கொண்டால் உன்னைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என பேசி அவரை நம்ப வைத்திருக்கிறார்.
சில நாட்களில் மைசூர் ரயில்வே ஒர்க் ஷாப்பில் வேலை இருக்கிறது எனவும், 21 லட்சம் ரூபாயை செலுத்தினால் உடனடியாக உனக்கு வேலை கிடைக்கும், அதன்பின் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதை அடுத்து அதனை நம்பிய அந்தப் பெண் 21 லட்சம் ரூபாயை அவரது வங்கி கணக்கில் செலுத்தி இருக்கிறார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட பின் அந்த இளைஞர் அந்த இளம் பெண்ணின் அழைப்பை ஏற்கவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் தாவணகெரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் மாண்டியாவை சேர்ந்த 31 வயதான மது என்ற இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாண்டியாவை சேர்ந்த மது திருமண வலைதளங்கள் மூலமாக படித்த இளம் பெண்களிடம் அதிகமாகி திருமணம் செய்து கொள்வதாக பேசுவார். சில நாட்கள் கடந்த பின் அரசு வேலை வாங்கித் தருகிறேன் ,அதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை காட்டி அதற்கு பணம் கட்ட வேண்டும் என லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதை வழக்கமாக வைத்தது தெரிய வந்தது.
இதுவரை மது சிக்மங்களூரைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் மூன்று லட்சம் ரூபாய், மண்டியாவை சேர்ந்த பெண்ணிடம் 25 லட்சம் ரூபாய், பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணிடம் இரண்டு லட்சம் ரூபாய் என பல பெண்களிடம் சுமார் 65 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாகவும் அவரது மோசடி பட்டியல் இன்னும் நீளும் எனவும், அவரிடம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications