அரசு பெண் அதிகாரியின் அந்தரங்க வீடியோ.. வீட்டுக்குள் கேமரா பொருத்திய 3 பேர் கும்பல்.. ஷாக் தகவல்
பெங்களூர்: கர்நாடகாவில் அரசு பெண் அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்து பெட்ரூமில் ரகசியமாக கேமரா பொருத்தி அவருடைய அந்தரங்கங்களை வீடியோவாக பதிவு செய்த சம்பவம் நடந்துள்ளது. அதுமட்டுமின்றி அந்த அரசு அதிகாரியிடம் ரூ.50 லட்சம் வரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் அரசு துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரை 3 பேர் கும்பல் தொடர்பு கொண்டு பேசியது.

அப்போது அந்த கும்பல் ‛‛உங்களின் அந்தரங்க வீடியோக்கள் எங்களிடம் உள்ளது.. ரூ.50 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் அந்த வீடியோவை வெளியே ரிலீஸ் செய்துவிடுவோம்'' என்று மிரட்டினர்.
3 பேர் கைது
இதனால் பயந்து போன அந்த பெண் அதிகாரி சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில் அவர்களின் பெயர்கள் சமீர் நிசார் செய்க், அப்துல் ரஷீத் மற்றும் முகமது திலாவர் என்பதும், அவர்கள் பத்திரிகையாளர்கள் என்று கூறி இப்படியான பணப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.
சாவி கிடைத்தது எப்படி?
இந்த 3 பேர் கும்பல் பெண் அதிகாரியின் அந்தரங்க வீடியோக்களை எப்படி படம்பிடித்தனர் என்பது பற்றி போலீசார் திடுக்கிட வைக்கும் தகவலை கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறியதாவது: ‛‛பெண் அரசு அதிகாரி ஒருவர் மாலமாருதி போலீசில் செய்த புகாரில் 3 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் பெண் அதிகாரி வீட்டில் சாவி வைக்கும் இடத்தை அறிந்து கொண்டனர்.
அரசு அதிகாரி தனது வீட்டு சாவியை கதவின் அருகே வைத்து செல்வார். வீட்டில் வேலை செய்யும் நபருக்கு பணம் கொடுத்து சாவி இருக்கும் இடத்தை அறிந்து அதனை வைத்து வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.
ரகசிய கேமரா
அதன்பிறகு அரசு அதிகாரியின் பெட்ரூமில் உள்ள லைட் ஹோல்டருக்குள் ரகசியமாக கேமராவை வைத்துள்ளனர். இதற்காக அவர்கள் பிரத்யேகமான கேமராக்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி உள்ளனர்.
இந்த கேமரா மூலமாக பெண் அதிகாரியின் அந்தரங்கங்களை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். பெண் அதிகாரி எங்களிடம் புகார் செய்தார்.
3 பேர் சிக்கியது எப்படி?
நாங்கள் அவரிடம் பணம் தருகிறேன் என்று குறிப்பிட்ட இடத்துக்கு 3 பேரையும் அழைத்தோம். அவர்கள் 3 பேரும் அங்கு வந்தபோது அவர்களை கைது செய்தனர். கைதானவர்களிடம் 3 செல்போன்கள், 64 ஜிபி பென்டிரைவர், 6 கேமராக்கள், 2 ஓடிஜி டிரைவ்ஸ், 128 ஜிபி மெமரி கார்டுகள் 8 உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீட்டு வேலைக்காரரை தேடிவருகிறோம்.
கைதான 3 பேரும் இதுபோல் இன்னும் பலரை குறிவைத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்களின் வீட்டு சாவியை வீட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து செல்லக்கூடாது. கையோடு கொண்டு செல்வது நல்லது. ஏனென்றால் இங்கு அரசு அதிகாரி தனது வேலைக்காரரை நம்பி கதவு அருகே சாவியை விட்டு சென்றது தான் இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணமாகும். இதனால் கவனமாக இருக்க வேண்டும்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications