மாமியார் வீடு போக வேண்டிய அரசு ஊழியர்.. தாலி கட்டும் நேரத்தில் சேட்டை.. ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்
பெங்களூர்: 100 கிராம் தங்கம், ரூ.10 லட்சம் வரதட்சணை தந்தால் மட்டுமே தாலி கட்டுவேன் என கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். திருமணம் நிச்சயம் முடிந்த பின்னர் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த அரசு ஊழியர், தாலி கட்டும் நேரத்தில் செய்த சேட்டையில் சிறையில் தற்போது கம்பி எண்ணுகிறார்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் கானாப்புராவை சேர்ந்த சச்சின் பட்டீல் என்பவர் இவர் பெலகாவி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். பெலகாவி மாவட்டம் கானாப்புராவை, சேர்ந்த இளம்பெண்ணுக்கும் சச்சின் பட்டீலுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது சச்சின் பட்டீலுக்கு வரதட்சணையாக ரூ.5 லட்சம் ரொக்கமும், 50 கிராம் தங்க நகைகளும் கொடுப்பதாக பேசி முடித்திருக்கிறார்கள்.

திருமணத்திற்கு தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர்களின் திருமணம் பெலகாவியில் நடைபெறுவதாக இருந்தது. திருமண மண்டபத்திலும் திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் செய்திருந்தனர். இந்த சூழலில் சுபமுகூர்த்த நேரத்தில் மணமகன் சச்சின் பட்டீல் மற்றும் மணமகள் ஆகியோர் மணமேடைக்கு வந்தனர். உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் மண்டபத்தில் திருமணத்தை காண காத்திருந்தனர்.
தாலி கட்ட சில நிமிடங்களே இருந்த நிலையில், சச்சின் பாட்டீல் திடீரென எழுந்து. தனக்கு ரூ.10 லட்சம் ரொக்கமும், 100 கிராம் தங்கமும் வரதட்சணையாக கொடுக்க வேண்டும், அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், தாலி கட்ட மாட்டேன் என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், சச்சின் பட்டீலை சமாதானம் செய்ய முயன்றுள்ளார்கள். ஆனாலும் அவர் பிடிவாதமாக இருந்ததுடன், திருமணத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சித்தார். அப்போது பெண் வீட்டார் அவரை ஒரு அறையில் தள்ளி சிறைபிடித்தனர்.
மேலும் பெண் வீட்டார் கானாப்புரா போலீசாருக்கு மாப்பிள்ளையின் செயல் குறித்து தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் திருமண மண்டபத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பெண் வீட்டார் போலீசாரிடம் கூறுகையில், கல்யாணத்தை நிச்சயம் செய்யும் போதே, ரூ.5 லட்சம் ரொக்கமும், 50 கிராம் தங்க நகைகளும் கொடுப்பதாக பேசினோம். இதனை சச்சின் பட்டீலும் ஏற்றுக்கொண்டார். ஆனால் தாலி கட்டும் நேரத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்.
திருமணம் நிச்சயம் செய்த பிறகு, எங்கள் பெண்ணுடன் பல இடங்களுக்கு சச்சின் பட்டீல் சுற்றினார். அப்போது மணப்பெண்ணுடன் அவர் உல்லாசமும் அனுபவித்திருக்கிறார்.. இப்போது அதனை சாதகமாக பயன்படுத்தி கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்" என்று கூறினார்கள். இதையடுத்து கானாப்புரா போலீசார், சச்சின் பட்டீலை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கும் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications