கர்நாடகாவை அலறவிடும் "போலீஸ் மரணங்கள்"- சப் இன்ஸ்பெக்டரை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை!
பெங்களூர்: கர்நாடகாவில் போலீஸ் அதிகாரிகளின் அடுத்தடுத்த மரணங்கள் புதிய அரசியல் புயலாக மையம் கொண்டிருக்கிறது. கர்நாடகாவின் யாதகிரியில் சப் இன்ஸ்பெக்டர் பரசுராம் டிரான்ஸ்பர் விவகாரத்தில் லஞ்சம் கேட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் திடீரென உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தற்போது பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திம்மே கவுடா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாக இருப்பது சப் இன்ஸ்பெக்டர் பரசுராம் மரணம். இந்த விவகாரத்தில் ஆளும் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சிகளான பாஜக, ஜேடிஎஸ் நெருக்கடி கொடுத்து கொண்டிருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் தரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

இந்த நிலையில் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திம்மே கவுடா கிராமத்தில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது சர்ச்சையாகி உள்ளது. திம்மேகவுடா, தமிழ்நாடு எல்லையான அத்திபெலே இன்ஸ்பெக்டராக பணியாற்றிய போதுதான் பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் திம்மே கவுடா அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த சஸ்பெண்ட் முடிந்த பின்னர் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.
திம்மே கவுடா தற்கொலை தொடர்பாக அவரது குடும்பத்தினர் கூறுகையில், பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை திம்மே கவுடா விசாரித்து வந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரிப்பதற்கு விருப்பமே இல்லை எனவும் திம்மே கவுடா கூறியிருந்தாராம். அரசியல் தலைவர்கள் மூலம் இந்த வழக்கில் நெருக்கடி தரப்பட்டதால் அப்படி சொன்னாராம் திம்மே கவுடா. இதனால்தான் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்கின்றனர்.
காவல் நிலையங்களின் லாக்கப் மரணங்கள், என்கவுண்ட்டர்கள்தான் பொதுவாக சர்ச்சைக்குரிய பேசுபொருளாக இருக்கும். கர்நாடகாவில் போலீஸ் அதிகாரிகளின் மரணங்களே அடுத்தடுத்த சர்ச்சைக்குரிய பேசுபொருளாகிவிட்டது. இந்த தற்கொலை இனி எப்படிப்பட்ட புயலை கர்நாடகாவில் உருவாக்கப் போகிறதோ?
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications