எடியூரப்பா மீதான ஊழல் வழக்கில் சிக்கிய எடப்பாடி பழனிசாமி உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம்!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான ரூ12 கோடி ஊழல் வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சந்திரகாந்த் ராமலிங்கம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு வளர்ச்சி ஆணையம் எனப்படும் பிடிஏ, குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டத்துக்கு அனுமதி கொடுத்தவர் மாஜிம முதல்வர் எடியூரப்பா. இந்த கட்டுமானப் பணிகளுக்காக ஒப்பந்தம் பெற்ற ராமலிங்கத்திடம் எடியூரப்பா, மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் ரூ12 கோடி லஞ்சம் பெற்றதாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக எடியூரப்பாவின் பேரனுடன் ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கம் பேசும் ஆடியோவும் வெளியாகியது.

இந்த ஆடியோ கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் மக்கள் பிரதிநிதிகளை விசாரிக்கும் நீதிமன்றம் இதற்கு அனுமதி தர மறுத்தது. இது தொடர்பான வழக்கில் எடியூரப்பா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த கர்நாடகா உயர்நீதிமன்றம், கர்நாடகா லோக் ஆயுக்தா அமைப்புக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
இதனடிப்படையில் எடியூரப்பா, மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது கர்நாடகா லோக் ஆயுக்தா. இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளவர் சந்திரகாந்த் ராமலிங்கம். கர்நாடகா அரசின் மிக முக்கியமான ஒப்பந்தகாரரான சந்திரகாந்த் ராமலிங்கம் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சந்திரகாந்த் ராமலிங்கம், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மிக நெருக்கமான உறவினர்.
எடப்பாடி பழனிசாமி தொடர்பான தமிழக ஊழல் முறைகேடு வழக்குகளிலும் சிக்கியவர் சந்திரகாந்த் ராமலிங்கம். இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, சம்பந்தி என்பவர் ரத்த சொந்தம் இல்லையே என கூறி பரபரப்பை கிளப்பிய இருந்தார். பணப் பரிமாற்றம் தொடர்பான சேகர் ரெட்டி வழக்கு, 8 வழி சாலை திட்ட விவகாரம் என பலவற்றிலும் அடிபட்டவர்தான் இந்த சந்திரகாந்த் ராமலிங்கம். தமிழக நெடுஞ்சாலையிலும் முக்கிய ஒப்பந்ததாரர்.
எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி வீட்டைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் ராமலிங்கம். எடப்பாடி பழனி சாமியின் மருமகள் திவ்யாவின் சகோதரியான சரண்யா கணவரின் சகோதரர்தான் இந்த சந்திரகாந்த் ராமலிங்கம். ஏற்கனவே ரூபாய் நோட்டு மதிப்பிழப்பின் போது பெங்களூரில் ரூ2,000 நோட்டுகளுடன் பிடிபட்டு சிறைவாசம் அனுபவித்தவரும் இந்த சந்திரகாந்த் ராமலிங்கம்தான். இந்த சந்திரகாந்த் ராமலிங்கம் குறித்து முதன் முதலாக ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தவர் மறைந்த தினகரன் கோஷ்டி வெற்றிவேல்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications