மனைவி இருந்தும் "தடுமாறிய" போலீஸ்காரர்.. சபலத்தில் சிக்கிய ஜோடி! ஒரே வீட்டில், ஒரே நாளில்.. மை காட்
பெங்களூர்: போலீஸ்காரருக்கு வந்த கள்ளக்காதல், இறுதியில் 2 உயிர்களை பறித்து சென்றுவிட்டது.. என்ன நடந்தது கர்நாடக மாநிலத்தில்?
கர்நாடக மாநிலம், ஹூப்ளி மாவட்டத்திலுள்ளது நவநகர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் மகேஷ்.. இவருக்கு 42 வயதாகிறது.. இவர் தார்வார் வித்யாகிரி போலீஸ் ஸ்டேஷனில், போக்குவரத்து காவலராக வேலை பார்த்து வருகிறார்.

கள்ளக்காதல்: இவருக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அதுவே கள்ளக்காதலாக வளர்ந்துள்ளது.. இந்த விஜயலட்சுமிக்கு 30 வயதாகிறது.. கல்யாணமாகி 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனாலும், குடும்பம், குழந்தைகளை மறந்து, மகேஷூடன் உறவை நீட்டித்து வந்தார். ஒருகட்டத்தில் தன்னுடைய கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு, மகேஷூடனேயே வந்துவிட்டார் விஜயலட்சுமி.
தன்னை நம்பி விஜயலட்சுமி வந்துவிட்டதால், நவ்நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கேயே விஜயலட்சுமியுடன் குடும்பம் நடத்த துவங்கினார்..
துர்நாற்றம்: இப்படிப்பட்ட சூழலில், இவர்களது இந்த வாடகை வீடு, 2 நாட்களாகவே பூட்டிக்கிடந்தது... பிறகு நேற்று முதல் அந்த வீட்டிற்குள்ளிருந்து துர்நாற்றமும் வீசியது.. இதனால் அந்த பகுதி மக்கள், உடனடியாக ஹூப்ளி ஏபிஎம்சி நவநகர் போலீசுக்கு தகவல் தந்தார்கள்..
போலீசாரும் விரைந்து வந்து, மகேஷின் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர்.. அப்போதுதான், மகேஷூம், விஜயலட்சுமியும் தூக்கில் சடலமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.. பின்னர் அவர்களது உடல்களை மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்யவும் அனுப்பி வைத்தனர்.. இதுதொடர்பாக விசாரணையையும் மேற்கொண்டனர்..
கள்ளக்காதல்: அப்போதுதான், இந்த கள்ளக்காதல் விவகாரம்தான் அனைத்துக்கும் காரணம் என தெரியவந்தது. அதாவது, விஜயலட்சுமி, மகேஷ் இரு வீட்டுக்குமே, இந்த தகாத உறவு குறித்து தெரிந்துள்ளது. 2 குடும்பத்தினருமே, இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. இருவருமே தங்களது குடும்பங்களை மறந்துவிட்டு, வாடகைக்கு வீடு எடுத்து குடித்தனம் நடத்துவதை கண்டித்துள்ளனர்..
அதனால்தான், ஒன்றாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கள்ளக்காதல் ஜோடி முடிவெடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.. ஒரு போலீஸ்காரர் கள்ளக்காதலியுடன் ஒன்றாக தூக்கு போட்டுக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications