பாஜகவின் அஸ்திவாரமே காலி.. 5ல் நான்கை அப்படியே அள்ளப்போகும் காங்கிரஸ்.. பரபர கர்நாடக தேர்தல் சர்வே!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் 5 மண்டலங்களில் உள்ள தொகுதிகளில் 4 மண்டலங்களில் காங்கிரஸ்தான் அதிக இடங்களை வெல்லும் என்று ஏபிபி சேனல் - சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகாவில் தொங்கு சட்டசபை உருவான நிலையில் எடியூரப்பா 6 நாட்கள் ஆட்சி அமைத்தார். அதன்பின் ஜேடிஎஸ் - காங்கிரஸ் சார்பாக குமாரசாமி ஆட்சி அமைத்தார்.

ஒன்றரை வருட ஆட்சி ஆபரேஷன் கமலா காரணமாக கவிழ்ந்த காரணத்தால், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தது. எடியூரப்பா மீண்டும் ஆட்சி அமைத்த நிலையில், அதன்பின் பொம்மை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

எடியூரப்பா

எடியூரப்பா

இந்த நிலையில்தான் கர்நாடகாவில் பாஜக தோல்வி அடையும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏபிபி- சி வோட்டர் கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏபிபி சேனல் மற்றும் சி வோட்டர் வெளியிட்ட கருத்து கணிப்பில், மொத்தம் அம்மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில் 127 இடங்கள் வரை அதிகபட்சம் பெற்று காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பாஜக - 68 - 80
காங்கிரஸ் 115-127
மதசார்பற்ற ஜனதா தளம் 23-35

என்று கணிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி

காங்கிரஸ் ஆட்சி

அதாவது காங்கிரஸ் இந்த தேர்தலில் வெற்றிபெற்று அங்கே ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும். இந்த நிலையில் பாஜகவிற்கு கண்டிப்பாக மெஜாரிட்டி கிடைக்காது. பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதும் கடினம். பெரும்பாலும் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெறும் என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மண்டல வாரியாகவும் காங்கிரஸ் அதிக மண்டலங்களை கைப்பற்றும் என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 மண்டலம்

மண்டலம்

ஹைதராபாத் மண்டலம் - காங்கிரஸ் 44 சதவிகித வாக்குகளை பெறும். பாஜக 37 சதவிகித வாக்குகளை பெறும். அங்கே காங்கிரஸ் 19 - 23 இடங்களை வெல்லும். பாஜக 8-12 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

மும்பை கர்நாடகா மண்டலம் - காங்கிரஸ் 43 சதவிகித வாக்குகளை பெறும். பாஜக 43 சதவிகித வாக்குகளை பெறும். அங்கே காங்கிரஸ் 25 - 29 இடங்களை வெல்லும். பாஜக 21-25 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

 லிங்காயத்து

லிங்காயத்து

இது லிங்காயத்து அதிகம் உள்ள மண்டலம் ஆகும். இங்கேமட்டும் காங்கிரஸுக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்று கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. லிங்காயத்துக்கு 2 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்கும் அறிவிப்பு கூட பாஜகவிற்கு கைகொடுக்காது என்று இந்த கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

கடலோர கர்நாடகா மண்டலம் - காங்கிரஸ் 41 சதவிகித வாக்குகளை பெறும். பாஜக 46 சதவிகித வாக்குகளை பெறும். ஜேடிஎஸ் 6 சதவிகித வாக்குகளை பெறும். அங்கே காங்கிரஸ் 8 - 12 இடங்களை வெல்லும். பாஜக 9 -13 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா

கர்நாடகா

மத்திய கர்நாடகா மண்டலம் : காங்கிரஸ் 41 சதவிகித வாக்குகளை பெறும். பாஜக 38 சதவிகித வாக்குகளை பெறும். ஜேடிஎஸ் 6 சதவிகித வாக்குகளை பெறும். அங்கே காங்கிரஸ் 18-22 இடங்களை வெல்லும். பாஜக 12-16 இடங்களை வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக பெங்களூர் பகுதியில் அதாவது பெங்களூர் மாநகர பகுதியில் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ்தான் அதிக இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது காங்கிரஸ் 15-19 இடங்களை பெங்களூர் மாநகரத்தில் வெல்லும் வாய்ப்புகள் உள்ளன. பாஜக இங்கே 11-15 இடங்களை வெல்லும் வாய்ப்புகள் உள்ளன என்று கணிக்கப்பட்டு உள்ளது

தேர்தல் தேதி

தேர்தல் தேதி

இப்படி 5 மண்டலத்தில் 4ல் காங்கிரஸ்தான் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. கர்நாடகா- 224 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடக்கிறது. கர்நாடகா சட்டசபை பதவி காலம் மே 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே 10ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 5.21 கோடி வாக்காளர்களில் 2.62 கோடி ஆண் வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். அங்கே ஹிஜாப் விவகாரம், பெங்களூரில் திட்டங்களுக்கு கமிஷன் பெற்ற விவகாரம், மத மோதல், ஜாதி ரீதியிலான மோதல் உள்ளிட்ட பல விஷயங்கள் தேர்தல் நேரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+